இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்[2][3]. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.
ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).