விதர்ப்ப நாடு (Vidarbha kingdom), சமஸ்கிருத இதிகாசமான மகாபாரதத்தில் குறிப்பிட்ட பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டை யது குலத்தின் ஒரு கிளையினரான போஜர்கள் ஆண்டனர். விதர்ப்ப நாட்டின் தலைநகரம் குந்தினபுரியாகும். மகாபாரதம் குறிப்பிடும் விதர்ப்ப நாட்டு மன்னர் வீமன் ஆவார். (மகாபாரதம் வன பருவம் 3:53 முதல் 77 முடிய).