தெற்கு கோசலம் அல்லது தட்சின கோசலம் (Dakshina Kosala) (ஒடியா: ଦକ୍ଷିଣ କୋଶଳ ସାମ୍ରାଜ୍ୟ) கோசல நாட்டின் தெற்குப் பகுதிகளை பிரித்து நிறுவப்பட்ட அரசாகும். தெற்கு கோசலத்தை இராமரின் மகன் குசன் ஆண்டார். தெற்கு கோசல நாடானது, தற்கால இந்தியாவின்சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் ஒடிசாவின் மேற்கு பகுதிகளைக் கொண்டது. இராமரின் தாயும், தசரதனின் பட்டத்து இராணியுமான கௌசல்யை, தெற்கு கோசால நாட்டைச் சேர்ந்தவர் என இராமாயணக் காவியம்,கூறுகிறது.
இராமருக்குப் பின்னர் கோசல நாட்டை பிரித்தது, இராமரது இரண்டு மகன்களில் மூத்தவரான குசன், சிராவஸ்தியை தலைநகராகக் கொண்டு வடக்கு கோசல நாட்டையும், இளைய மகன் லவன், விந்திய மலைகளில் பாயும் குசாவ்ரதே ஆற்றின் கரையில் உள்ள தற்கால பிலாஸ்பூரில் குசஸ்தலிபுரம் எனும் புதிய தலைநகரை நிறுவி தெற்கு கோசலத்தையும் ஆண்டார்.
தெற்கு கோசல நாடு தற்கால சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் மேற்கு ஒடிசா மாநிலப் பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியின் அருகில் மகத நாடு, காசி நாடு போன்ற நாடுகள் அசுர வளர்ச்சி பெற்றதால், தெற்கு கோசல நாடு நலிவுற்று வீழ்ச்சியடைந்தது.