மகிஷ நாடு அல்லது மகிஷக நாடு (Mahisha or Mahishaka) பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இது அரக்கர்களின் நாடாக விளங்கியது. இந்நாட்டின் அரசன் மகிசாசூரன் ஆவார்.
இந்நாடு விந்திய மலைக்கு தெற்கில், தற்கால மைசூர் பகுதிகளில் அமைந்திருந்தது. புராணங்கள், குறிப்பாக மார்கண்டேய புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்கள், மகிசாசூரன் ஆண்ட இராச்சியத்தை விவரிக்கின்றன. [1]