இதன் மேற்குப்பக்க முடிவு, குஜராத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் வடக்காகவும், கிழக்காகவும் சென்று மிர்சாப்பூருக்கு அண்மையில் கங்கை நதியை அணுகுகிறது. இம்மலைத்தொடரின் வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் விந்திய மலைத்தொடரினாலும், அராவலி மலைத்தொடரினாலும் மறைக்கப்பட்டு உள்ளதால் இவை வறண்ட பகுதிகளாக உள்ளன.