விதர்பா

விதர்பா
विदर्भ
Map of India with Vidarbha highlighted in red
Map of India with Vidarbha highlighted in red
நாடுஇந்தியா
பரப்பளவு
 • மொத்தம்97,321 km2 (37,576 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,30,03,179
 • அடர்த்தி240/km2 (610/sq mi)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
பெரிய நகரம்நாக்பூர்

விதர்பா அல்லது விதர்ப்பம் (மராத்தி: विदर्भ, ஆங்கிலம்: Vidarbha) மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பழைய பெயர் பெரர் ஆகும். இது மகாராஷ்டிராவின் மொத்தப்பரப்பில் 31.6% ஆக்கிரமித்துள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில் 21.3% கொண்டுள்ளது. இதன் வடக்கே மத்தியப் பிரதேசம் மாநிலம் உள்ளது. கிழக்கே சட்டீஸ்கரும் தெற்கே தெலுங்கானா உள்ளன. மேற்கே மத்தியப்பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. விதர்பா தனக்கென தனியான கலாச்சாரமும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. விதர்பா பகுதியின் மிகப்பெரிய நகராக நாக்பூர் இருக்கிறது, இரண்டாவது பெரிய நகராக அமராவதி உள்ளது. பெரும்பாலான விதர்பாவாசிகள் மராத்தி மொழி மற்றும் வாகர்தி மொழி பேசுகின்றனர். நாக்பூர் பகுதியில் ஆரஞ்சு மற்றும் பருத்தி பிரபலமானது. மகாராஷ்டிராவின் கனிம வளங்களில் விதர்பா மூன்றில் இரண்டு பங்கு வகிக்கிறது. வனப்பரப்பில் நான்கில் மூன்று பகுதியைக் கொண்டுள்ளது. விதர்பா பகுதியில் டடோபா புலி திட்டம் (Tadoba Tiger project), மெல்கட் புலி திட்டம் (Melghat Tiger Project), பென்ச் புலி திட்டம் (Pench Tiger Project), பொர் சரணாலயம்(Bor Sanctuary), பாந்தார மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலயங்கள் அனைத்தும் அமைந்துள்ளன. இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட விதர்பா அமைதியான பகுதி. எந்தவித மத, இன மோதல்களும் இல்லாத பகுதி. ஆனால் அதிக அளவு மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகராஷ்டிரத்தின் பிற பகுதிகளைவிட இங்கு பொருளாதாரம் வளர்ச்சியின்றி இருக்கிறது.

விவசாயிகள் தற்கொலை

இங்கு விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடப்பதைத் தடுக்க அகோலா தாலுகாவிலுள்ள ஜில்லா பரிஷித் பள்ளி மாணவ மாணவியருக்கு ’அப்பா விஷம் குடிக்காதீர்கள்’ என்ற பொருள்படும் பாடலை ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர். இதனை ஊர் மக்கள் முன் மாணவர்கள் நடித்தும் காட்டுகின்றனர்.[2]

மக்கட்தொகை விவரம்

மதம் மதம் மக்கட்தொகை %
இந்து 15,866,514 76.906%
பௌத்தம் 2,697,544 13.075%
இஸ்லாம் 1,720,690 8.340%
கிறித்துவம் 70,663 0.343%
சீக்கியம் 37,241 0.181%
சமணம் 89,649 0.435%
பிற 127,516 0.618%
குறிப்பிடப்படாதது 21,170 0.103%
மொத்தம் 2,30,03,179 100.000%

வெளியிணைப்புகள்

சான்றுகள்

  1. "Population". 2011-03-31. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2011-04-06.
  2. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஜனவரி;2013; பக்கம் 13,15; விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கும் மாணவர்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!