ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme), உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். அமெரிக்காவில் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து மனித வளர்ச்சி அறிக்கை மற்றும் மனித வளர்ச்சிச் சுட்டெண் களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது இதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், ஐரோப்பிய ஒன்றியமும் உதவி வழங்கி வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளில் சரியான சிறந்த முறையில் பயன்படுத்த உதவி வருகின்றது.