ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம் (United Nations Security Council Resolution) என்பது "பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற" ஐக்கிய நாடுகளின் அமைப்பான பாதுகாப்பு அவையின் பதினைந்து உறுப்பினர்கள் நிறைவேற்றும் தீர்மானமாகும்.
ஐநா பட்டயத்தின் 27வது அதிகாரம் எவ்வாறு வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இதன்படி "நடைமுறை வரம்புமீறிய தீர்மானங்கள்" நிறைவேற பதினைந்து உறுப்பினர்களில் ஒன்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் வாக்கினைப் பெறுவதுடன் வெட்டுரிமை பெற்ற ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் எவராலும் வெட்டுரிமையைப் பயன்படுத்தப்படாது இருக்க வேண்டும். "நடைமுறை தீர்மானங்களுக்கு" எந்தவொரு ஒன்பது உறுப்பினர் நேர்மறை வாக்கும் போதுமானது.
ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக சீன மக்கள் குடியரசு (1971இல் "சீனக் குடியரசிற்கு" மாற்றாக), பிரான்சு, உருசியக் கூட்டமைப்பு (1991இல் சோவியத் ஒன்றியத்திற்கு மாற்றாக), ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ளன.
வெளியிணைப்புகள்