ஐக்கிய நாடுகள் நாள்

ஐக்கிய நாடுகள் நாள்
ஐநா கொடி
பிற பெயர்(கள்)ஐநா நாள்
கடைப்பிடிப்போர்உலகளவில்
வகைஐக்கிய நாடுகள்
கொண்டாட்டங்கள்சந்திப்புகள், உரையாடல்கள், கண்காட்சிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள்
நாள்24 அக்டோபர்
தொடர்புடையனஉலக மேம்பாட்டுத் தகவல் நாள்

1947 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட தீர்மானித்தது.[1]

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாளை பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.[2]

ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்கள், சாதனைகள் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் ஐநா நாளன்று குடியரசுத் தலைவர் அரசு அறிவிப்பினை வெளியிடுகின்றார்; பராக் ஒபாமா இத்தகைய அறிவிப்பொன்றை வெளியிட்டார்[3].

உலக மேம்பாட்டுத் தகவல் நாள்

1972ஆம் ஆண்டு முதல் ஐநாவின் உலக மேம்பாட்டுத் தகவல் நாளும் அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. ஐக்கிய நாடுகள் General Assembly Session 2 Resolution 168. United Nations Day A/RES/168(II) 31 October1947. Retrieved 2008-10-24.
  2. ஐக்கிய நாடுகள் General Assembly Session -1 Resolution 2782. Proclamation of United Nations Day as an international holiday A/RES/2782(XXVI) 6 December 1971. Retrieved 2008-10-24.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2011-05-15.

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!