ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர்பொதுச் சபையின் உறுப்பினர்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
4 சூன் 2019 அன்று நைஜீரியாவின் திச்சானி முகம்மது-பாண்டே ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன்னால் மரியா பெர்னாண்டா எசுப்பினோசா தலைவராக இருந்தார்.[1]
தேர்தல்
தலைவர் பதவி ஆண்டுதோறும் ஐந்து புவியியல் குழுக்களுக்கு இடையே சுழற்ச்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆப்பிரிக்க நாடுகள், ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன், மற்றும் மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள்.[2]