உலக வானிலையியல் அமைப்பு

உலக வானிலையியல் அமைப்பு
சுருக்கப்பெயர்WMO
உருவாக்கம்23 மார்ச்சு 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-03-23)
வகைஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனம்
சட்டப்படி நிலைசெயலில்
தலைமையகம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தலைமை
தலைமையதிகாரி
Deutsch (de) , ஜெர்மனி
2019 முதல்
பொது செயலாளர்
பெட்டேரி தாலஸ், பின்லாந்து[1]
2016 முதல்
மேல் அமைப்பு
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
இணையதளம்WMO.int

உலக வானிலையியல் அமைப்பு (World Meteorological Organization) என்பது வளிமண்டல அறிவியல், காலநிலை, நீரியல், புவி இயற்பியல் தொடர்பான சர்வதேச உலகக் கூட்டுறவை ஊக்குவிக்கும் பொறுப்புகொண்ட ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும் .[2]

உ.வா.அ 1873 ஆம் ஆண்டில் வானிலை தரவு மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றத்திற்கான ஒரு மன்றமாக நிறுவப்பட்டது. இது அரசு சாரா அமைப்பான சர்வதேச வானிலை அமைப்பிலிருந்து உருவானது.[3] உ.வா.அமைப்பின் நிலை மற்றும் கட்டமைப்பை சீர்திருத்துவதற்கான திட்டங்கள் 1947 ஆம் ஆண்டின் உலக வானிலை மாநாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்தன, இதன் முடிவில் உலக வானிலை அமைப்பு முறையாக நிறுவபட்டது.[4] இந்த மாநாட்டு முடிவு 23 மார்ச் 1950 அன்று நடைமுறைக்கு வந்தது, அடுத்த ஆண்டு உ.வா.அ ஐ.நா. அமைப்பினுள் ஒரு அரசுகளிடை அமைப்பாக செயல்படத் தொடங்கியது.

உ.வா.அமைப்பில் 193 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இணைந்து உள்ளன. இது இதன் உறுப்பு நாடுகளின் அந்தந்த வானிலை மற்றும் நீர்வள நிறுவனங்களுக்கிடையிலான தரவு, தகவல், ஆராய்ச்சி ஆகியவற்றை "இலவசமாக, கட்டுப்பாடற்று" பரிமாறிக்கொள்வதை எளிதாக்குகிறது.[5][6] சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், வள மேலாளாண்மை மற்றும் சமூக பொருளாதார மேம்பாடு தொடர்பான விஷயங்களில் இது அரசு சாரா கூட்டாளிகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்கிறது.[7]

இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள உலக வானிலை பேராயத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இது உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டது. இது தன் கொள்கைகள் மற்றும் முன்னுரிமை விசயங்களைபற்றி முடிவு செய்ய நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது. தற்போது ஜெர்மனியின் ஹெகார்ட் அட்ரியன் தலைமையிலான ஒரு நிர்வாக சபை பேராயத்தை வழிநடத்துகிறது.[8]

குறிப்புகள்

  1. The Secretariat public.wmo.int retrieved on 16.06.2019
  2. "History of WMO". World Meteorological Organization. 2 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
  3. "Who we are". World Meteorological Organization. 2 December 2015. Archived from the original on 5 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. https://library.wmo.int/doc_num.php?explnum_id=10076
  5. "Who we are". World Meteorological Organization (in ஆங்கிலம்). 2015-12-02. Archived from the original on 2020-03-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.
  6. https://public.wmo.int/en/resources/wmo-building-conference-centre
  7. "What we do". World Meteorological Organization (in ஆங்கிலம்). 2016-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.
  8. Adrian, Gerhard (2019). "President". WMO. World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 15 June 2019.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!