காந்திநகர் (Gandhinagar, குசராத்தி: ગાંધીનગર உச்சரிப்புⓘ) மேற்கு இந்திய மாநிலம் குசராத்தின் தலைநகரம் ஆகும். காந்திநகர் அகமதாபாத்திற்கு வடக்கே ஏறத்தாழ 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இது குசராத் மாநிலத்தின் புதிய தலைநகராகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.[1]
நடுவில் அமைந்துள்ள அரசு வளாகங்களைச் சுற்றிலும் முப்பது செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செக்டரிலும் அதற்கெனத் தனியான வணிக வளாகம், சமூக மையம், துவக்கப் பள்ளி, சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் குடியிருப்புகளை கொண்டுள்ளது.[1] பல பூங்காக்கள், சோலைகள் மற்றும் மனமகிழ் மையங்கள் அமைக்க இடம் வரையறுக்கப்பட்டுள்ளது. நகரத்தை ஓர் பசுமைப் பூங்காவாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.[1]
விக்சனரி விக்சனரி நூல்கள் விக்கிநூல் மேற்கோள் விக்கிமேற்கோள் மூலங்கள் விக்கிமூலம் விக்கிபொது செய்திகள் விக்கிசெய்தி