†The city of Chandigarh comprises all of the union territory's area. ††Under Section 4 of the Punjab Reorganisation Act, 1966.
சண்டிகர் (Chandigarh) இந்தியாவில் உள்ள ஒரு ஒன்றியப் பகுதி மற்றும் நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சண்டிகரின் மொத்த மக்கள் தொகை 1,055,450 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.75% மக்களும், நகரப்புறங்களில் 97.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.19% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 580,663 ஆண்களும் மற்றும் 474,787 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 818 வீதம் உள்ளனர். 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சண்டிகரில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 9,258 மக்கள் வாழ்கின்றனர். சண்டிகரின் சராசரி படிப்பறிவு 86.05 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.99 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 81.19 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 119,434 ஆக உள்ளது.
[5]
சமயம்
சண்டிகரில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 852,574 (80.78 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 51,447 (4.87 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 8,720 (0.83 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 138,329 (13.11 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 1,960 (0.19 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 1,160 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 246 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,014 (0.10 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
சண்டிகரின் ஆட்சி மொழிகளான, ஆங்கிலம், பஞ்சாபி , இந்தி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.