பட்டியாலாஇந்தியாவின்பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். பட்டியாலா இந்திய விடுதலைக்கு முன் பிரித்தானியர் ஆட்சிக்கு அடங்கிய மன்னர் ஆட்சிப் பகுதியாக விளங்கியது. பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் 29°49’, 30°47’ ஆகிய வட நிலநேர்க்கோடுகளுக்கு இடையிலும், 75°58’, 76°54' ஆகிய கிழக்கு நிலநிரைக்கோடுகளுக்கு இடையிலும் அமைந்துள்ளது. இதே பெயருள்ள பாட்டியாலா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமுமாகும். கிலா முபாரக் என்ற கோட்டையைச் சுற்றி இந்த நகரம் அமைந்துள்ளது. பழைய பஞ்சாப் மாகாணத்தில் சித்து வம்சத்தினரால் ஆளப்பட்ட பட்டியாலா அரசின் தலைநகராகவும் இருந்தது.
1763ஆம் ஆண்டு பாபா ஆலா சிங் என்ற படைத்தலைவரால் கட்டப்பட்டது. [4]பட்டியாலா என்பது பாபா ஆலா சிங்குக்கு உரித்தான பட்டி (நிலம்) என்னும் பொருள் கொண்டது.
இங்குள்ள மக்கள் அணியும் பாரம்பர்யமிக்க தலைப்பாக்கட்டு பரன்டா, சல்வார் (பெண்கள் அணியும் ஆடை), ஜூத்தி (ஒருவகை காலணி) ஆகியவை தனிப்பெருமை பெற்றவை. மதுவகைகளை அளக்கும் பாட்டியாலா அளவும் (பாட்டியாலா பெக்) தனிச்சிறப்பானது .[4]