கச்சு வளைகுடா

கச்சு வளைகுடா
கச் வளைகுடாவின் நிலப்படம் (இடது பக்கமுள்ளது) நாசாவின் புவி கண்காணிப்பு மையம்

கச்சு வளைகுடா என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின், மேற்குக் கடலான அரபுக் கடல், கச்சுப் பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப் பரப்பினை கச்சு வளைகுடா என்பர். கச்சு வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது.[1]. கச்சு வளைகுடா 99 மைல் நீளம் கொண்டது.

கச்சு வளைகுடா குஜராத்தின் கச்சு மாவட்டத்தையும், சௌராஷ்டிரா தீபகற்பத்தையும் பிரிக்கிறது. கோமதி ஆறு கச்சு வளைகுடாவில் துவாரகை எனுமிடத்தில் கலக்கிறது.

இதன் அருகில் ருக்மாவதி நதி அமைந்துள்ளது. மேலும் பூநாரைகள் அதிகமாகக் காணப்படும் ‘ஃபிளமிங்கோ சிட்டி’ (Flamingo city) என்ற பகுதி ஒன்று உள்ளது. [2] இங்கிருந்து பூநாரைகள் தமிழகப் பகுதியான கோடியக்கரைக்கு வருகை தருகின்றன.[1] கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை கடல் எல்லைக் கோடுகளால் பிரிக்கிறது.

கச்சு வளைகுடாவை சுற்றியுள்ள குஜராத் மாவட்டங்கள்

  1. கச்சு மாவட்டம்
  2. தேவபூமிதுவாரகை மாவட்டம்
  3. ஜாம்நகர் மாவட்டம்
  4. ராஜ்கோட் மாவட்டம்

இதையும் காண்க

குறிப்புதவிகள்

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!