பஞ்சமகால் மாவட்டம் (Panchmahal), மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையகம் கோத்ரா நகராகும். உலக அளவில் பேசப்பட்ட கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வு இம்மாவட்டத்தில் 27 பெப்ரவரி 2002இல் நடந்தது. இங்குள்ள சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்காவை, யுனேஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுக் களங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது.[1]
இந்தியாவின் 640 மாவட்டங்களில், இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் வறுமைமிக்க மாவட்டமாக இந்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் 2006ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானியம் பெறும் ஆறு மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [3]
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 2,388,267. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 458 நபர்களாக உள்ளனர். ஆண்-பெண் பாலின விகிதம் 1000-945ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 73.32%ஆக உள்ளது.