சூல்பனேஸ்வர் காட்டுயிர் காப்பகம் (Shoolpaneshwar Wildlife Sanctuary) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் பரவியுள்ள சாத்பூரா மலைத்தொடரில் அமைந்த் காட்டுயிர் காப்பகம் ஆகும். இக்காட்டுயியர் காப்பகம் நர்மதா ஆற்றின் தெற்கு கரையில் 607.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இக்காட்டுயிர் காப்பகம் குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா மாநிலங்களின் பொது எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இக்க்காட்டுயிர் காப்பகம் வறண்ட காடுகள், நதிக்கரை காடுகள், தேக்கு மரங்கள், வேளாண் நிலங்கள் மற்றும் இரண்டு நீர்த்தேக்கங்கள் கொண்டுள்ளது.[1][2]இக்காட்டுயிர் காப்பகம் 1982-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]ராஜ்பிப்லா மலைகள் கொண்ட இக்காட்டுயிர் காப்பகத்தின் மிக உயர்ந்த மேட்டு நிலம் தன்மால் பகுதியில் உள்ளது.