நர்மதா மாவட்டம் (Narmada district) இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் ஒன்று. இது மத்திய குஜராத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத் தலைமையகம் ராஜ்பிப்லா நகராகும்.[1].
மாவட்டத்தின் பரப்பளவு 2,755 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 5,90,379 . [2] குஜராத்தில் மக்கட்தொகை கொண்ட மாவட்டங்களில் இது மூன்றாவதாகும்.[3]
2006இல் இந்திய நடுவண் அரசின், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்த இந்தியாவின் 640 மாவட்டங்களில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்ட 250 மாவட்டங்களில் நர்மதா மாவட்டமும் ஒன்று.[6]
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 590,379.[3]
மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கி.மீட்டருக்கு 214 நபர்கள்.
பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 73.29%. [3]