மோதசா (Modasa) இந்தியா, குஜராத் மாநிலத்தின் ஆரவல்லி மாவட்டத்தின் தலைமையிடமாகவும், நகராட்சி மன்றமாகவும் உள்ளது.
சபர்கந்தா மாவட்டப் பழங்குடி மக்கள் உள்ள வட்டங்களைக் கொண்டு 15 ஆகஸ்டு 2013இல் புதிதாக துவக்கப்பட்டது ஆரவல்லி மாவட்டம்.[1][2]
மோதசா நகரம் கடல் மட்டத்திலிருந்து 646 அடி உயரத்தில் உள்ளது. இந்நகரத்திற்கான போதுமான குடிநீர், ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூம் ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. [3]
2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, மோதசா நகர மக்கள் தொகை 90,000 மட்டும். எழுத்தறிவு விகிதம் 74%. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை, மொத்த மொதசா மக்கட்தொகையில் 13% மட்டுமே.