அசிம் ஹசிம் பிரேம்ஜி (Azim Hashim Premji குசராத்தி: અઝીમ પ્રેમજી) (பிறப்பு ஜூலை 24, 1945), ஒரு இந்தியப் பொறியியலாளரும்தொழில் முனைவோர், வள்ளல் ஆவார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் தலைவர் ஆவார். இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என அறியப்படுகிறார்.[6][7] சுமார் நாற்பது ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தினை வழிநடத்தி உலகமென்பொருள் துறையின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக ஆனார்.[8][9]2010 ஆம் ஆண்டில் ஆசியாவீக் எனும் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் உலகில் சக்திவாய்ந்த 20 மனிதர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் டைம் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராகத் தேர்வானார்.[10] பிரேம்ஜி , விப்ரோவின் 73 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
நவம்பர்,2017 அன்றைய நிலவரப்படி 19.5 பில்லியன்அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட இவர் இந்தியாவின் செல்வந்தர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அசிம் பிரேம்ஜி தொண்டு நிறுவனத்திற்கு 2.2 பில்லியன் வழங்கினார்.[11]
தன்னுடைய தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தால் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோவை உருவாக்கியதற்காக எல்லா காலக் கணிப்பிலும் மிகச்சிறந்த தொழில்முனைவோர் களுள்[15] ஒருவராக பிசினஸ் வீக் என்னும் இதழ் வெளியீட்டு நிறுவனம் பிரேம்ஜியைப் பட்டம் தந்து பெருமைப்படுத்தியது.
2002 ஆம் ஆண்டில் மணிபால் அகாதமி இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. 2006 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள தேசிய தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி இவருக்கு தொழிலில் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர் எனும் விருதினை வழங்கியது.[16]2009 ஆம் ஆண்டில் தொழில் துறையின் இவரின் சேவையைப் பாராட்டி கனெடிகட்டில் உள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.[17]2005 இல் மைசூர் பல்கலைக்கழகம் கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியது.[18]
2017 இல் இந்தியா டுடே இவரை இந்தியாவின் பலம் பொருந்திய 50 நபர்களுள் 9 ஆவது நபராக அறிவித்தது.[21]
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை
2001 ஆம் ஆண்டில் இவர் அசிம் பிரேம்ஜி தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.[22] இது ஒரு இலாப நோக்கமற்றது. மேலும் அனைவருக்கும் தரமான , சமமான கல்வியை கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் அரசு ஆர்ரம்பப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறது. கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தான் செல்வந்தனாக இருப்பது தனக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தந்தது இல்லை எனக் கூறியுள்ளார்.[23] மேலும் பெரும் செல்வந்தர்களிடம் உள்ள நிதியின் பெரும்பகுதியினை தொண்டுநிறுவன செயல்பாடுகளுக்கு செலவழிப்பதற்காக வாரன் பபெட் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர் இணைந்து தெ கிவிங் பிளட்ஜ் எனும் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் இந்தியா சார்பாக முதலில் கையொப்பமிட்டார். ரிச்ச்ர்டு பிரான்சன் மற்றும் டேவிட் செயின்ஸ்பியூரி ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது நபராக தொண்டுநிறுவன சங்கத்தில் இணைந்தார்.[24]
ஏப்ரல், 2013 இல் தன்னுடைய சொத்தில் இருந்து மேலும் 25 சதவீதம் நிதியை தனது தொண்டுநிறுவனத்திற்கு அளித்துள்ளதாக தெரிவித்தார்.[25]
சூலை,2015 இல் விப்ரோவில் உள்ள தனது பங்குகளில் 18 சதவீத பங்கினை எடுத்துக்கொண்டார். தற்போதுவரை 39சதவீத பங்குகளை எடுத்துக்கொண்டுள்ளார்.[26][27]
↑"Azim Premji". Worldofceos.com. Archived from the original on 27 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑"Padma Awards"(PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original(PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.