பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்

வில்லியம் கோட்டை, 1735ல் வங்காள மாகாணத்தின் தலைநகரம், கொல்கத்தா

பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (Provinces of India), பிரித்தானிய இந்தியாவில் முன்பு இதனை இராஜதானிகள் என்றும், இராஜதானி நகரங்கள் என்றும் அழைப்பர். இம்மாகாணங்கள் கிபி 1612 முதல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆகஸ்டு 1947 வரை இருந்தது. மேலும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட 565 சுதேச சமஸ்தானங்களும் இருந்தன. [1]

வரலாற்று கால வரிசைப்படி இம்மாகாணங்களின் ஆட்சியை மூன்றாகப் பிரிப்பர்.

  • பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில், சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்கள், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை (இராஜதானி) நகரங்களாக விளங்கியது.
  • இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய பிரித்தானியர்கள் வணிகம் மற்றும் தொழில் செய்வதை படிப்படியாக விட்டு விட்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சியாளர்களாக மாறினர்.
  • கிபி 1858 - 1947 முடிய இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்ற பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, பர்மா மற்றும் ஏடன் துறைமுகப் பகுதிகளை கைப்பற்றி தனது ஆட்சியில் இணைத்துக் கொண்டது.

பிரித்தானிய இந்தியா (1793-1947)

இந்திய துணைக்கண்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்

கிபி 1608ல் முகலாயர்கள், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வணிகம் மற்றும் தொழில் செய்ய, அரபுக் கடற்கரையின் சூரத் பகுதியை வழங்கினர்.

பின்னர் 1611ல் ஆந்திரக் கடற்கரையின் மசூலிப்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலைகள் கட்டினர்.[3] 1707ல் இந்தியாவில் முகலாயார் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர், மராத்தியப் பேரரசு எழுச்சி கொண்டது. 1761ல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் பேரரசு, ஆங்கிலேயர்களிடம் வீழ்ச்சியுற்றது.

முன்னர் 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை, 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டை போர்களில் வங்காளம் மற்றும் அயோத்தி நவாபுகளை வென்று, வட இந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப் பரப்புகளை விரிவுப்படுத்தினர்.

1760ல் நடைபெற்ற வந்தவாசிப் போரில் பிரஞ்சுப் படைகளை ஆங்கிலேயர்கள் சென்னைப் பகுதிகளிலிருந்து விரட்டியடித்தனர்.

1775 - 1818 முடிய பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற ஆங்கிலேய-மராட்டியப் போர்களின் முடிவில் மராத்தியப் பேரரசின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தை, பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ பகுதியாக மாற்றினர் [4] [5]

1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியாவில் கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிரித்தானிய இந்தியாவின் அரசு ஆட்சி அமைக்கப்பட்டது.[5] அது முதல் இந்தியா, பிரித்தானியப் பேரரசின் காலனியாத்திக்க நாடாக மாறியது.

பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகத்திற்கும், நீதி முறைகளுக்கு தேவையான சட்டங்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பிரித்தானியாவில் நடைபெறும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு பிரித்தானிய இந்தியா அரசுகளின் துறைகள் மற்றும் மாவட்டங்கள் நிர்வகிக்கப்பட்டது.[6] and the Princely States,[7]

ஆங்கிலேயர்கள் நேரடியாக நிர்வகிக்க இயலாத, வளமற்ற, பாலவன, மலைகளும், காடுகளும் அடர்ந்த பகுதிகளை, தனக்கென சொந்தமாக இராணுவம் வைத்துக் கொள்ளாத இந்தியக் குறுநில மன்னர்கள் மூலம், கப்பம் வாங்கிக் கொண்டு மறைமுக ஆட்சி செலுத்தினர்.

1910 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த இந்திய மக்கள்தொகையில் 77% விழுக்காடும், மொத்த நிலப்பரப்பில் 54% விழுக்காடும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப்பகுதியில் இருந்தது. [8] மீதமுள்ள இந்திய நிலப்பரப்புகளை இந்திய மன்னர்களும் மற்றும் சிறு நிலப்பரப்புகளை போர்த்துகேய இந்தியா மற்றும் பிரஞ்சு இந்திய ஆட்சினரும் ஆண்டனர்.

ஆகஸ்டு, 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின், பிரித்தானிய இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது

1824 முதல் 1937 முடிய பிரித்தானிய இந்தியாவில் பர்மாவின் மூன்றில் இரண்டு பகுதிகள் கொண்டிருந்தது.[6] பின்னர் பர்மாவை தனி காலனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று இலங்கை மற்றும் மாலத்தீவும், பிரித்தானியப் பேரரசின் தனி காலனி நாடுகளாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய இந்தியாவின் மேற்கில் பாரசீகம், வடமேற்கில் ஆப்கானித்தான், வடக்கில் நேபாளம் மற்றும் திபெத்து, வடகிழக்கில் சீனா, கிழக்கில் தாய்லாந்து, தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லைகளாக கொண்டிருந்தது. இருந்தது. மேலும் ஏடன் மாகாணமும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இருந்தது.[9]

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் நிர்வாகம் (1793-1858)

31 டிசம்பர் 1600 அன்று துவக்கபப்ட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 1611ல் ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியான மசூலிப்பட்டினத்திலும், 1611ல் இந்தியாவின் மேற்கு கடற்கரை நகரமான சூரத்திலும் வணிக மையங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினர்.[10]1639ல் சென்னையில் சிறு வணிக மையத்தை நிறுவினர். [10][10] 1661ல் போர்த்துகல் நாடு இளவரசியை மணந்த பிரித்தானிய இளவரசருக்கு, சீர்வரிசையாக, மும்பை வழங்கப்பட்டது.[10]

முகலாயப் பேரரசர் ஷாஜகானின் அனுமதியுடன், 1640ல் வங்காளத்தின் கூக்ளி நகரத்தில் தொழிற்சாலைகள் நிறுவினர்.[10]

ஐம்பதாண்டுகள் கழித்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கிழக்கிந்தியக் கம்பெனியின் தொழிற்சாலைகளை கூக்ளியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.

ஜாப் சார்னோக் எனும் கம்பெனி நிர்வாகி கூக்ளி அருகே மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கி அப்பகுதியை கொல்கத்தா எனப்பெயரிட்டு, அப்பகுதியில், 1683ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதலாவது தலைமையகத்தை நிறுவினார்.[10]

ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட, சென்னை மாகாணம், மும்பை மாகாணம் மற்றும் வங்காள மாகாணம் என அழைக்கப்படும் இராஜதானிகளில், கிழக்கிந்திய கம்பெனியர், 18ம் நூற்றாண்டின் நடுவில், மூன்று கோட்டைகளுடன் கூடிய வணிக மையங்கள், தொழிற்சாலைகள் நிறுவினர். [11]

இராஜதானிகள்

  • 1773ல் வங்காளப் பகுதி முழுவதும், ஆங்கிலேயர்கள் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.[12]

புதிய மாகாணங்கள்

இந்தியாவில் கம்பெனி ஆட்சி கலைக்கப்படும் வரை நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புகள்

பிரித்தானியப் பேரரசின் கீழ் இந்திய நிர்வாகம் (1858–1947)

வரலாற்று பின்னணி

பிரித்தானிய அரசின் மையங்களாக மாகாணங்கள் நிறுவப்பட்டது. 1834ல் மாகாணங்களின் சட்ட விதிகளை வரையறுக்க, ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்திய அரசு, புதிய பகுதிகளை உடன்படிக்கை மூலம் அல்லது போர் மூலம் கைப்பற்றும் போது, அப்பகுதிகளை அருகில் உள்ள மூன்று இந்திய மாகாணங்களில் ஒன்றுடன் இணைக்கப்பட்டது.[16]

சட்டமன்றங்களால் வரையறுக்கப்படாத கஞ்சாம் மாவட்டம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்கள் பிரித்தானிய இந்திய அரசின் தலைமை ஆளுரின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டது. [17]

வரையறுக்கப்படாத, சட்டமன்றங்கள் இல்லாத மாகாணங்கள் தலைமை ஆளுநரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. [18] அவைகள்:

முறைப்படுத்தப்பட்ட மாகாணங்கள்

  • பர்மா: கீழ் பர்மா 1852ல் வங்காள மாகாணத்துடன இணைக்கப்பட்டது. மேல் பர்மா 1862ல் நிறுவப்பட்டது. முழு பர்மாவும் 1937ல் பிரித்தானிய இந்தியாவிலிருந்து பிரித்து, தனியாக பிரித்தானிய பர்மா அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டது.
  • பிகார் மற்றும் ஒரிசா மாகாணம்: 1912ல் வங்காள மாகாணத்திலிருந்து பிரித்து புதிதாக நிறுவப்பட்டது. 1936ல் இம்மாகாணத்தை பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாக பிரிக்கப்பட்டது.
  • ஒரிசா மாகாணம்:1936ல் பிகார்-ஒரிசா மாகாணத்தை பிரித்து, ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது.
  • சிந்து மாகாணம்:1936ல் பம்பாய் மாகாணத்திலிருந்து சிந்து மாகாணம் நிறுவப்பட்டது.

முதன்மை மாகாணங்கள்

1909ல் பிரித்தானிய இந்தியாவின் வரைபடம், மஞ்சள் நிறப்பகுதிகள் பிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற சுதேச சமஸ்தானங்கள்

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் எட்டு மாகாணங்கள், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.:[19] 1905 - 1912 வங்காளப் பிரிவினையின் போது, கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதி துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் இருந்தது. 1912ல் மீண்டும் ஒன்றிணைந்த வங்காள மாகாணம் நிறுவப்பட்டு, வடகிழக்கு மாநிலங்களைக் கொண்ட அசாம் மாகாணம், துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டது. பின்னர் துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தில் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் புதிதாக நிறுவப்பட்டது.

மாகாணம்[19] பரப்பளவு (ஆயிரம் சதுர மைல்களில்) மக்கள்தொகை (மில்லியனில்) தலைமை நிர்வாகி
பர்மா மாகாணம் 170 9 துணைநிலை ஆளுநர்
வங்காள மாகாணம் 151 75 துணைநிலை ஆளுநர்
சென்னை மாகாணம் 142 38 ஆளுநர் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு
மும்பை மாகாணம் 123 19 ஆளுநர் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு
ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் 107 48 துணைநிலை ஆளுநர்
மத்திய மாகாணம் 104 13 தலைமை ஆணையாளர்
பஞ்சாப் 97 20 துணைநிலை ஆளுநர்
அசாம் மாகாணம் 49 6 தலைமை ஆணையாளர்

குறு மாகாணங்கள்

சில சிறிய மாகாணங்கள் தலைமை ஆணையாளர் நிர்வாகத்தில் இருந்தது:[20]

குறு மாகாணம்[20] பரப்பளவு (ஆயிரம் சதுர மைல்) மக்கள்தொகை (மில்லியன்) தலைமை நிர்வாக அதிகாரி
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் 16 2,125 தலைமை ஆணையாளர்
பலுசிஸ்தான் மாகாணம் 46 308 தலைமை ஆணையாளர்
குடகு மாகாணம் 1.6 181 மைசூர் இராச்சிய இருப்பிட அதிகாரி
அஜ்மீர் - மெர்வாரா மாகாணம் 2.7 477 தலமை ஆணையாளர்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 3 25 தலைமை ஆளுநர்

ஏடன்

  • ஏடன் துறைமுகப் பகுதி மாகாணம், 1839 முதல் 1932 முடிய மும்பை மாகாணத்தின் ஆளுநர் ஆட்சியில் இருந்தது. பின்னர் 1937 முதல் பிரித்தானியப் பேரரசின் நேரடி நிர்வாகத்திற்குச் சென்றது.

1947ல் பிரித்தானிய இந்தியாவின் 17 மாகாணங்கள்

1947ல் பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்கள்

பிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையில் பெரிதும், சிறிதுமான 562 சுதேச சமஸ்தானங்கள், பிரித்தானிய அரசுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை ஆண்டனர்.

பிரித்தானிய முகமைகள்

  1. பஞ்சாப் முகமை
  2. இராஜபுதனம் முகமை
  3. கத்தியவார் முகமை
  4. பரோடா மற்றும் குஜராத் முகமை
  5. ரேவா கந்தா முகமை
  6. மகி கந்தா முகமை
  7. சூரத் முகமை
  8. தக்காண முகமை
  9. மத்திய இந்திய முகமை
  10. மால்வா முகமை
  11. போபால் முகமை
  12. இந்தூர் முகமை
  13. புந்தேல்கண்ட் முகமை
  14. பகேல்கண்ட் முகமை
  15. கிழக்கிந்திய முகமை

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Administrative Divisions of India from 1872 to 2001
  2. Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 5 Quote: "The history of British India falls ... into three periods. From the beginning of the 17th to the middle of the 18th century, the East India Company is a trading corporation, existing on the sufferance of the native powers, and in rivalry with the merchant companies of Holland and France. During the next century the Company acquires and consolidates its dominion, shares its sovereignty in increasing proportions with the Crown, and gradually loses its mercantile privileges and functions. After the Mutiny of 1857, the remaining powers of the Company are transferred to the Crown ..." (p. 5)
  3. Imperial Gazetteer of India vol. II 1908, ப. 452–472
  4. Imperial Gazetteer of India vol. II 1908, ப. 473–487
  5. 5.0 5.1 Imperial Gazetteer of India vol. II 1908, ப. 488–514
  6. 6.0 6.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 46–57
  7. Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 58–103
  8. Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 59–61
  9. Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 104–125
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 6
  11. Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 7
  12. 12.0 12.1 12.2 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 9
  13. 13.0 13.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 10
  14. Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 11
  15. பண்பாட்டுச் சின்னங்களும்[தொடர்பிழந்த இணைப்பு]
  16. "Full text of "The land systems of British India : being a manual of the land-tenures and of the systems of land-revenue administration prevalent in the several provinces"". archive.org.
  17. Geography of India 1870
  18. Geography of India 1870
  19. 19.0 19.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 46
  20. 20.0 20.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 56

மேற்கோள்கள்

  • The Imperial Gazetteer of India (26 vol, 1908–31), highly detailed description of all of India in 1901. online edition
  • Imperial Gazetteer of India vol. II (1908), The Indian Empire, Historical, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxv, 1 map, 573
  • Imperial Gazetteer of India vol. III (1908), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502), Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxvi, 1 map, 520
  • Imperial Gazetteer of India vol. IV (1908), The Indian Empire, Administrative, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!