தத்தாத்ரேயா பாலகிருசுனா காலேல்கர் அல்லது காகா காலேல்கர் (ஆங்கிலம்;Kaka Kalelkar;தேவநாகரி: दत्तात्रेय बाळकृष्ण कालेलकर) ( டிசம்பர் 1, 1895 - ஆகஸ்ட் 21, 1981) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரருள் ஒருவர். காந்தியவாதி. மேலும், இவர் ஒரு எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். 1965 ஆம் ஆண்டு தனது குசாராத்தியப் படைப்புக்கு சாகித்ய அகடாமி விருதைப் பெற்றார்.[1]
வாழ்க்கை
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பெல்கன்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் புனே ஃபெர்குஸன் கல்லூரியில் தனது கல்லூரி கல்வியை பயின்றார். கல்லூரிக்கு பிறகு ராஷ்டிரமத் என்ற மராட்டிய தேசிய தினசரி பத்திரிக்கையில் இதழாசிரியருடன் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பரோடாவில் உள்ள கங்காதர் வித்யாலாயாவில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார்.
எழுத்துப்பணிகள்
காலேல்கர் எழுதிய நூல்களின் தலைப்புகளைக் கீழே காணலாம்.
காந்திய சிந்தனை சாரம் [Quintessence of Gandhian Thought (ஆங்கிலம்)]
Profiles in Inspiration (ஆங்கிலம்)
Stray Glimpses of Bapu (ஆங்கிலம்)
Mahatma Gandhi's Gospel of Swadeshi (ஆங்கிலம்)
ஒட்டரட்டிதேவரோ (குஜராத்தி) (மேலும் 'Even behind the Bars' என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)
உத்ர்கண்டில் பிகின்டி (மராத்தி) (மேலும், 'Even behind the Bars' என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)