ரோகில்லாப் போர் (Rohilla War) என்பது 1773-74 காலகட்டத்தில் அவத் (தற்கால உத்தரப் பிரதேசத்தில் உள்ளது) அரசின் நவாப், ரோகில்லாக்கள் மீது படையெடுத்து அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த ரோகில்கண்ட் பகுதியைக் கைப்பற்றியதைக் குறிக்கிறது.
ரோகில்கண்ட் ஆட்சியாளர் அபிஸ் ரகுமத் கான், மராட்டிய படையெடுப்பின் அச்சம் காரணமாக அவத் நவாப்புடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் அத்தகைய படையெடுப்பு ஏதும் நடைபெறவில்லை. நவாப் அதற்குரிய கட்டணத்தை தருமாறு வற்புறுத்தினார். ரகுமத் கான் காலதாமதம் செய்யவே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் உதவியுடன் நவாப் ரோகில்கண்ட் மீது படையெடுத்து அப்பகுதியை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார். 1794ல் மீண்டும் ரொகில்லாக்களுடன் போர் ஏற்பட்டதால் இது முதலாம் ரொகில்லாப் போர் எனவும் அழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ Rohilla War