இரா. சிதம்பரம் என்கிற இராசகோபாலன் சிதம்பரம் (Rajagopala Chidambaram) ஓர் இந்திய அணு அறிவியலாளர் மற்றும் புகழ்பெற்ற உலோகவியல் அறிஞர். இந்திய அரசின் முதன்மை அறிவியல் அறிவுரைஞராகப் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் அடிப்படை அணுவியல் ஆய்வுமையமான பாபா அணு ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனராக இருந்துள்ளார். சிதம்பரம் பொக்ரானில் நடந்த 1974 அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். மே 1998ஆம் ஆண்டு நடந்த சக்தி நடவடிக்கையின்போது அணுசக்தித் துறையின் குழுவை தலைமையேற்று நடத்தியுள்ளார்.[ 1]
சிதம்பரம் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் 'மாண்புடை நபர்களின் குழு' அங்கத்தினர்களில் ஒருவராக உள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே குடிசார் அணுவாற்றல் கூட்டுறவு உடன்பாடுகையெழுத்தாகும் முன்னர் பன்னாட்டு முகமையின் இயக்குனர்குழு "பாதுகாவல்கள் உடன்பாட்டை" ஏற்றுக்கொள்ள இவர் ஆற்றிய பங்கு முதன்மையானதாகும்.
கல்வி
சென்னையில் பிறந்த சிதம்பரத்தின் பள்ளிப்பருவம், மீரட்டில் துவங்கி, சென்னையில் முடிவடைந்தது. சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
1962ஆம் ஆண்டு மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். 1990இல் இம்மையத்தின் இயக்குநரானார்.[ 2]
மேற்கோள்கள்
↑ "Untitled Page" . pib.gov.in . பார்க்கப்பட்ட நாள் 2022-09-02 .
↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்110
வெளியிணைப்புகள்
கலை குடியியல் பணிகள் இலக்கியமும் கல்வியும் மருத்துவம் ஏனையவை பொதுப் பணி அறிவியலும் பொறியியலும் சமூகப் பணி விளையாட்டு வணிகமும் தொழிற்துறையும்