ஆலப்பாக்கம் (ஆங்கிலம்: Alapakkam), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னை மாவட்டத்தின், மத்திய சென்னை வருவாய் பிரிவுக்கு உட்பட்டது. இது போரூர், வளசரவாக்கம் மற்றும் மதுரவாயல் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. ஆலப்பாக்கத்திற்கு செல்ல இரண்டு முக்கிய சாலைகள் வழியாகும், ஆற்காடு சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை. ஆலப்பாக்கம், திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியையும் மற்றும் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தது.
அமைவிடம்
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலப்பாக்கம் அமைந்துள்ளது.
கல்வி நிறுவனங்கள்
- அரசு மேல்நிலைப்பள்ளி
- சென்னை மாநகரப் பள்ளி
- வேலம்மாள் வித்யாலயா பள்ளி
- சிறீ ஆதித்யா மெட்ரிகுலேசன் பள்ளி
- மீனாட்சி பல் கல்லூரி
- ஏழுமலை பாலிடெக்னிக்
- முத்துக்குமரன் பொறியியல் கல்லூரி
- ஆச்சார்யா சிக்ஷா மந்திர் (அஷ்டலட்சுமி நகர்)
- தேவி அகாடமி பள்ளி
கோயில்கள்
- நடராஜா கோயில்
- வள்ளிசெரபாலீஸ்வரர் கோயில்
அருகிலுள்ள அரசு அலுவலகங்கள்
- தாசில்தார் அலுவலகம் & இலவச சேவை மையம், ஆலப்பாக்கம் (பெருமாள் கோயில் தெருவுக்கு பின்னால் அமைந்துள்ளது).
- தபால் நிலையம், சக்தி நகர், போரூர் (பூந்தமல்லி நெடுஞ்சாலை)
- சென்னை மெட்ரோ நீர் மற்றும் கழிவுநீர் வாரிய பகுதி அலுவலகம், எண் 8 ஏ, கங்கை அம்மன் கோயில் தெரு, ஆலப்பாக்கம்.
மேற்கோள்கள்