திருமங்கலம் (Thirumangalam) சென்னை நகரின் அண்ணா நகரின் எல்லையில் அமைந்துள்ள ஓர் சுற்றுப் பகுதியாகும். திருமங்கலமும் முகப்பேரும் அண்ணா நகரின் எல்லைகளாக இருப்பினும் பெரும்பான்மையான நேரங்களில் இவை அண்ணாநகரின் பகுதிகளாகவே குறிப்பிடப்படுகின்றன. அண்ணா நகர் மற்றும் அண்ணா நகர் மேற்கின் எல்லைப்பகுதியாக துவக்கக்கால திருமங்கலம் சிற்றூர் விளங்குகிறது. இங்கு தொன்மையான திருமணியம்மன் கோவில் உள்ளது.