திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்

திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்

திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் (Trimbakeshwar Shiva Temple) திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

இது இந்தியாவின் மிக நீளமான ஆறான குடாநாட்டு கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.

இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.[1]

இருப்பிடம்

இந்த கோயில் பிரம்மகிரி, நீலகிரி மற்றும் கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரைக் குறிக்கும் மூன்று லிங்கங்கள் (சிவனின் சின்னமான வடிவம்) உள்ளன. இந்த கோயில் திருக்குளம் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது, இது 28 மீ (92 அடி) பு 30 மீ (98 அடி) அளவில் அமைந்துள்ளது. பில்வத்தீர்த்தம், விஸ்வநந்தீர்த்தம் மற்றும் முகுந்ததீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன. கங்காதேவி, ஜாலேஸ்வரர், ராமேஸ்வரர், கௌதமேஸ்வரர், கேதார்நாதர், ராமர், கிருஷ்ணர், பரசுராமர் மற்றும் லட்சுமி நாராயணர் போன்ற பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. இந்த கோவிலில் பல மடங்களும் புனிதர்களின் சமாதிகளும் உள்ளன.[2]

ஜோதிர்லிங்கம்

சிவ புராணத்தின் படி, பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு காலத்தில் படைப்பில் யார் உயர்ந்தவர் என்பதில் வாக்குவாதம் செய்தனர்.[3] அவற்றைச் சோதிக்க, சிவன் மூன்று உலகங்களையும் முடிவில்லாத ஒளியின் தூணான ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார். விஷ்ணு மற்றும் பிரம்மா, பகவான் தூணில் முறையே கீழ்நோக்கி மற்றும் மேல் நோக்கி பயணிக்க முடிவு செய்கிறார்கள். ஒளியின் முடிவைக் கண்டுபிடிக்க, பிரம்மா தான் முடிவைக் கண்டுபிடித்ததாக பொய் சொன்னார். அதே நேரத்தில் விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவன் ஒளியின் இரண்டாவது தூணாகத் தோன்றி, பூலோகச் சடங்குகளில் பிரம்மாவிற்கு இடமில்லை என்றும், நித்தியம் முடியும் வரை விஷ்ணு பூவுலகத்தாரால் வழிபடுவார் என்றும் பிரம்மாவை சபித்தார்.

ஜோதிர்லிங்கம் மிக உயர்ந்த பகுதியற்ற யதார்த்தம் ஆகும். அதில் சிவன் ஜோதிமயமாக உள்ளார். இதனால் சிவன் ஒளியின் வடிவமாகிய நெருப்பாக தோன்றிய இடங்கள் ஜோதிர்லிங்க சிவாலயங்கள் எனப்படுகின்றன.[4][5] இந்து புராணங்களின்படி, சிவபெருமானிற்கு 64 வடிவங்கள் உள்ளன. அவற்றை ஜோதிர்லிங்கங்களுடன் ஒப்பிட்டு குழப்பமடையக்கூடாது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் ஒவ்வொன்றும் தலைமை தெய்வத்தின் பெயரை எடுத்துக்கொள்கின்றன. ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாக கருதப்படுகின்றன. இந்த எல்லா தலங்களிலும், முதன்மை உருவம் சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் தொடக்கமற்ற மற்றும் முடிவில்லாத ஸ்தம்ப தூணைக் குறிக்கும் லிங்க வடிவம் ஆகும்.[6][7][8]

பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களும், அவை அமைந்துள்ள இடங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.: சோமநாதர் கோயில், குசராத்து, மல்லிகார்ஜுனா கோயில் ஸ்ரீசைலம் ஆந்திரப் பிரதேசம், மகாகாலேஸ்வர் கோயில், உஜ்ஜைன் மத்தியப் பிரதேசம், ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி, மத்தியப் பிரதேசம், கேதார்நாத் கோயில் இமயமலை, உத்தராகாண்ட் மாநிலம், பீமாசங்கர் கோயில், மகாராட்டிரம், காசி விசுவநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம், திரியம்பகேஸ்வரர் கோயில், மகாராஷ்டிரம், வைத்தியநாதர் கோயில், தியோகர்,சார்க்கண்ட் அல்லது பைஜ்நாத் கோயில், இமாச்சலப் பிரதேசம், நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குசராத்து, இராமநாதசுவாமி கோயில், இராமேசுவரம், தமிழ்நாடு மற்றும் கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டிரம்.[3][9]

கோயில் அமைப்பு

இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 2500 உயர மலைமீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும், அதில் நான்கு வாயில்களைக் கொண்டும் உள்ளது. இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானாசாகிப் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் கருவறையின்மேலே வழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது. அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது. கோயிலின் முதன்மைத் தெயுவமான திரிம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முக தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. சிவ பெருமானின் கிரீடம் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 4-5 மணி முதல் காட்டப்படுகிறது.

மற்ற அனைத்து ஜோதிர்லிங்கங்களும் சிவனை பிரதான தெய்வமாகக் கொண்டுள்ளன. முழு கருங்கல் கோயிலும் அதன் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது மற்றும் பிரம்மகிரி என்ற மலையின் அடிவாரத்தில் உள்ளது. கோதாவரியின் மூன்று மூலங்கள் பிரம்மகிரி மலையிலிருந்து தோன்றின.

மேற்கோள்கள்

  1. http://www.trimbakeshwar.net
  2. Harshananda, Swami (2012). Hindu Pilgrim centres (2nd ed.). Bangalore, India: Ramakrishna Math. pp. 149–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7907-053-0.
  3. 3.0 3.1 R. 2003, pp. 92-95
  4. Eck 1999, p. 107
  5. See: Gwynne 2008, Section on Char Dham
  6. Lochtefeld 2002, pp. 324-325
  7. Harding 1998, pp. 158-158
  8. Vivekananda Vol. 4
  9. Chaturvedi 2006, pp. 58-72

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!