தாராசிவா குகைகள்

தாராசிவா குகைகள்
धाराशिव लेणी
தாராசிவா குகை மண்டபம்
தாராசிவா குகை மண்டபம்
தாராசிவா குகைகள் is located in மகாராட்டிரம்
தாராசிவா குகைகள்
தாராசிவா குகைகள்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் தாராசிவா குகைகளின் அமைவிடம்[1]
ஆள்கூறுகள்: 18°11′44″N 76°0′36″E / 18.19556°N 76.01000°E / 18.19556; 76.01000
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்உஸ்மனாபாத்
கண்டுபிடித்தல்கிபி 10ஆம் நூற்றாண்டு
தாராசிவா குகைகள், உஸ்மானாபாத் மாவட்டம், மகாராட்டிரா மாநிலம், இந்தியா

தாராசிவா குகைகள் (Dharashiv caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் உஸ்மனாபாத் மாவட்டத்தின் தலைமையிடமான உஸ்மானாபாத் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள ஏழு குகைகளின் தொகுப்பாகும்.[2][3][4] தாராசிவா குகைகள் மகாராட்டிர மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5] இது கிபி ஐந்தாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்குகைகள் சமண சமயத்திற்காகானது.

வரலாறு

தாரசிவா குகைக் குடைவரைகள் கிபி 5 - 7-ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. இக்குகைகளின் குடைவரைகள் முதலில் இராஷ்டிரகூடர்களால் கிபி 10ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.[2] இக்குகை குடைவரைகள் முதலில் பௌத்தர்களால் நிறுவப்பட்டு பின்னர் சில குகைகள் சமணர்களின் நினைவுச் சின்னங்களாக மாற்றம் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.[6]

குகைகள்

ஏழு தாராசிவா குகைகளில், குகை எண் ஒன்றின் குடைவரை 20 கற்தூண்களைக் கொண்டது. குகை எண் 2, எல்லோரா, அஜந்தா குகைகள் போன்று வாகாடக மன்னர்களால் வடிக்கப்பட்டது. 80 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட இதன் மைய மண்டபத்தில் பிக்குகள் தங்குவதற்கான 14 அறைகளும், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கௌதம புத்தரின் சிலையும் உள்ளது. 3வது குகை, முதல் குகை போன்றுள்ளது. பிற நான்கு குகைகள் சமணர்களுக்கானது.[2][6]

தற்போதைய நிலைமை

தாராசிவா குகைகளை பௌத்தர்களும், சமணர்களும் தம்முடையது எனக் கொண்டாடுகின்றனர். மகாராட்டிரா மாநிலத்தின் 1200 குகைகளை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர் ஜேம்ஸ் பர்கூசன் என்பவரி கூற்றின் படி, தாராசிவா குகைகள் முதலின் பௌத்தர்களால் நிறுவப்பட்டது என்றும், பின்னர் 12ம் நூற்றாண்டில் அதில் சில குகைகள் சமணக் குகையாக மாற்றம் செய்யப்பட்டது என்பர்.[6][7][8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Location of Dharashiv Caves, Osmanabad". WikiMapia. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
  2. 2.0 2.1 2.2 "Dharashiv caves". osmanabad online. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  3. "Osmanabad". Incredible India. Archived from the original on 14 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  4. "दयनीय अवस्थेत धाराशीव लेण्या!" (in Marathi). Sakal. 24 July 2012 இம் மூலத்தில் இருந்து 14 சூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150714051417/http://www.esakal.com/NewsDetails.aspx?NewsId=5676853451568452978&SectionId=14&SectionName=%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A0%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%A1%E0%A4%BE&NewsDate=20120724&Provider=-&NewsTitle=%E0%A4%A6%E0%A4%AF%E0%A4%A8%E0%A5%80%E0%A4%AF%20%E0%A4%85%E0%A4%B5%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A5%E0%A5%87%E0%A4%A4%20%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B6%E0%A5%80%E0%A4%B5%20%E0%A4%B2%E0%A5%87%E0%A4%A3%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE!. பார்த்த நாள்: 13 July 2015. 
  5. "ऐतिहासिक धाराशिव लेण्यांचे अस्तित्व धोक्यात" (in Marathi). Lokmat. 16 April 2014 இம் மூலத்தில் இருந்து 14 சூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150714083439/http://www.lokmat.com/storypage.php?catid=315&newsid=619701. பார்த்த நாள்: 13 July 2015. 
  6. 6.0 6.1 6.2 "Dharashiv Caves - Historical Background". Official Government website of Osmanabad. Archived from the original on 11 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  7. "धाराशिव लेणींचा ठेवा : दीड हजार वर्षांचा इतिहास". Divya Marathi. 21 August 2011. http://divyamarathi.bhaskar.com/news/MAH-MAR-dharashiv-leni-sankatat-2367776.html. பார்த்த நாள்: 14 July 2015. 
  8. http://ekpravas.blogspot.in/2011/08/dharashiv-caves.html

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!