எழு அடுக்கள் கொண்டிருந்த சனிவார்வாடா கோட்டை அரண்மனைக் கட்டிடங்கள் 27 பிப்ரவரி 1828ல் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது. தற்போது தரை தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இக்கோட்டையை தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. இக்கோட்டை மகாராட்டிரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோட்டையில் நாள்தோறும் மாலை வேளைகளில் பேரரசர் சிவாஜியின் ஆட்சி முறை மற்றும் கோட்டையின் வரலாறு குறித்து
ஒலி ஒளிக் காட்சி மூலம் விளக்கப்படுகிறது.
வரலாறு
துவக்கத்தில் ஏழு அடுக்குகள் கொண்டிருந்த சனிவார்வாடா கோட்டை அரண்மனை மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர்களான பேஷ்வாக்கள் வாழ்ந்த அரண்மனையாகும்.
இக்கோட்டையின் தரைதளம் கருங்கற்களால் கட்டப்பட்டது. எஞ்சிய ஆறு தளங்கள் செங்கற்களால் கட்டப்பட்து. மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் போது, பீரங்கிகளால் ஆங்கிலேயர்கள் இக்கோட்டை தகர்த்த போது, தரைதளம் தவிர்த்த எஞ்சிய ஆறு தளங்கள் சிதறுண்டது. 1758ல் இக்கோட்டை அரண்மனையில் அரசகுடும்பத்தினரும், அவர்களின் நூற்றுக்கணக்கான உதவியாளர்களின் குடும்பங்களும் வாழ்ந்தது.
சனிவார்வாடா கோட்டையில் வாழ்ந்த பேஷ்வா நாராயணராவ், 1773ல் தமது சித்தப்பா பேஷ்வா இரகுநாதராவ் மற்றும் சித்தி ஆனந்திபாய் ஆகியோரின் ஆணையால் கொல்லப்பட்டார்.[3][4]
27 பிப்ரவரி 1828 அன்று சனிவார்வாடா கோட்டை அரண்மனை வளாகத்தின் உட்புறத்தில் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது. ஏழு நாட்கள் எரிந்த தீயில், கோட்டையின் உட்புறத்தில் இருந்த ஏழு அடுக்கள் கொண்ட அரண்மனை வளாகம் முற்றிலும் எரிந்து வீழ்ந்தது. சனிவார்வாடா கோட்டையும், தரை தளம் மட்டுமே தீயில் தப்பியது.[5]
கட்டுமானம்
மரத்தியப் பேரரசர்சாகுஜியின் பிரதம அமைச்சர் எனும் பேஷ்வாமுதலாம் பாஜிராவ், புனேவில் சனிவார்வாடா கோட்டையை நிறுவ 1 சனவரி 1730ல் அடிக்கல் நாட்டினார்.
மராத்தி மொழியில்சனிவார் என்பதற்கு சனிக்கிழமை என்றும், வாடா என்பதற்கு மக்கள் குடியிருப்பு பகுதி என்றும் பொருள். இக்கோட்டையும், அரண்மனைகளும் கருங்கல், செங்கல், சுண்ணாம்பு, தேக்கு மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. 16,110 ரூபாய் பொருட்செலவில் 1732ல் கட்டிமுடிக்கப்பட்ட சனிவார்வாடா கோட்டை, 22 சனவரி 1732 சனிக்கிழமை அன்று திறக்கப்பட்டது.
இக்கோட்டையின் உள்வளாகத்தில் பின் வந்த பேஷ்வாக்கள் அரசவை, நீர் ஊற்றுகளுடைன் பூங்காக்கள், மற்றும் பிற அரண்மனைகள் கட்டினர். மேலும் கோட்டையின் மேல் காவல் கோபுரங்கள் எழுப்பினர். கோட்டையில் முதன்மை வாயில் தவிர்த்த ஐந்து சிறு வாயில்கள் அமைத்தனர்.
↑Huned Contractor (31 October 2011). "Going ghost hunting". Sakal. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)