புரந்தர் கோட்டை

இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான புனேவுக்குத் தென்கிழக்கே 18 கல் தொலைவில் உள்ள புரந்தர் தாலுகாவில் உள்ள மலையில் புரந்தர் கோட்டை (Purandar fort) அமைக்கப்பட்டு உள்ளது.[1] இக்கோட்டை பிஜப்பூர் சுல்தானுக்குச் சொந்தமானது. இதை மகத்ஜி எனும் பிராமணர் நிர்வகித்து வந்தார். இவருக்குப் பின் இவரின் மூன்று மகன்களில் நீலோஜி என்பவனரின் பொறுப்பில் இக்கோட்டை இருந்தது.

மராட்டிய மன்னன் சிவாஜிக்கு தன் நாட்டின் தெற்கு எல்லைப்பாதுகாப்பிற்கு புரந்தர்க்கோட்டை அவசியமாதலால் அக்கோட்டையை தன் வசப்படுத்த எண்ணினார். இதற்காக அவர் ஒரு திட்டம் தீட்டினார். மழைக்காலம் வரை புரந்தர் கோட்டையின் அடிவாரத்தில் தங்க அனுமதிக்குமாறு நீலோஜியிடம் அனுமதி வேண்டினார். நிலோஜியும் இசைந்தார். சிவாஜியின் வீரர்கள் மாறுவேடமிட்டு புற்களுக்கிடையே ஆயுதங்களை மறைத்து வைத்து கோட்டைக்குள் எடுத்துச் சென்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு தானும் தன் குடும்பத்தினரும் கோட்டைக்குள் வந்து பண்டிகையில் கலந்து கொள்ள விரும்புவதாக சிவாஜி நிலோஜியிடம் கூறினார். நீலோஜியும் சம்மதித்தார். கோட்டைக்குள் சென்ற சிவாஜி நீலோஜியையும், அவரின் சகோதரர்களையும் சிறைப்படுத்தினார். சிவாஜி இவ்வாறு தந்திரமாக புரந்தர் கோட்டையைத் தன் வசப்படுத்தினார்.

ஔரங்கசீப்பின் படைத்தலைவன் ஜெய்சிங் சிவாஜியிடமிருந்து புரந்தர் கொட்டையைக் காப்பற்றும் எண்ணத்துடன் 14000 வீரர்களுடன் முற்றுகை இட்டார். சுமார் 1000 மராட்டிய வீரர்கள் கோட்டையைப் பாதுகாத்தனர். மொகலாயர்கள் வைத்த சுரங்க வெடியில் கோட்டை சுவரின் பெரும் பகுதி இடிந்து விழுந்தது. புரந்தர் கோட்டை மொகலாயர்கள் வசமானது.

புரந்தர் கோட்டையின் காட்சிகள்

மேற்கோள்கள்

  1. வட இந்தியக் கோட்டைகள், பக்.136


வார்ப்புரு:புனே மாவட்டம்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!