நாசிக் (Nashik) இந்தியாவின்மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இது மும்பையில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும் புனேயில் இருந்து 202 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது நாசிக் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது மிகவும் இனிமையான பருவநிலைக்கு பெயர்பெற்றது. இந்திய அரசின் வங்கித்தாள் அச்சகம் இங்கு உள்ளது. இந்த நகரம் விதையில்லா திராட்சைக்கு பெயர் பெற்றது.