இலக்கிம்பூரில் உள்ள இலைலாபரி விமான நிலையத் திட்டம் 1999-2003 முதல் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி நாராவின் பரபரப்பான பிரச்சாரம் மற்றும் பரப்புரைகளைத் தொடர்ந்து தொடங்கியது.[1] விமான நிலையத்தின் கட்டுமானம் 2003க்குள் நிறைவடைந்தது, முனையத்தை அப்போதைய மத்திய பொது விமான போக்குவரத்து அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன் திறந்து வைத்தார்.[1][2]
தற்போதைய நிலை
2013ஆம் ஆண்டு நிலவரப்படி, இலக்கிம்பூரில் உள்ள இலைலாபரி விமான நிலையம் தினசரி அடிப்படையில் ஏர் இந்தியா பிராந்திய சேவையால் கொல்கத்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இரவு தரையிறங்கும் வசதி உள்ளது மற்றும் பெரிய விமானங்களை இயக்க ஓடுபாதை மாற்றியமைக்கப்படுகிறது.[3]
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏர்ஏசியா லைலாபாரியினை தினசரி விமானச் சேவை மூலம் புது தில்லியுடன் இணைக்க உள்ளது.[4]
எதிர்கால முன்னேற்றங்கள்
இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் விமான நிலையத்தில் விமான மனிதவள பயிற்சி குழுமத்திற்கு 25 ஏக்கர் நிலத்தையும், மாநில அரசிடமிருந்து ஓடுபாதை மற்றும் தனிமைப்படுத்தும் பகுதியினை விரிவுபடுத்துவதற்காக மேலும் 84 ஏக்கர் நிலத்தையும் நவம்பர் 2019இல் கோரியிருந்தது.[4]
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன