குசிநகர் பன்னாட்டு விமான நிலையம் (Kushinagar Airport or Kasia Airport)[1][2] இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் உள்ள குசிநகரில் அமைந்துள்ளது. இது கோரக்பூர் விமான நிலையத்திற்கு கிழக்கே 52 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[3] குசிநகர் நகர் விமான நிலையம் 590 ஏக்கர் பரப்பும்,[4] ஓடுதரை 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.[5] இது இந்திய-நேபாள எல்லை அருகே அமைந்துள்ளது.
குசி நகரில் பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெளத்த பிக்குகள் மற்றும் இலங்கை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஆகியோருடன் வந்த இலங்கை விமானம் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது.
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன