ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்அமிர்தசரஸ் நகரத்தில் இருந்து 11 கி.மீ தூரம் வடமேற்கே அமைந்துள்ளது. இது இராஜசான்சி என்னும் ஊரில் அமிர்தசரஸ்-அஜ்னால சாலையில் அமைந்துள்ளது. அமிர்தசரஸ் நகரத்தை உருவாக்கியவரும் நான்காவது சீக்கிய குருவுமான குரு ராம் தாசின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் மூலம் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகிறது. புதியதாக திறக்கப்பட்ட முனையம் பழைய முனையத்தை காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது ஆகும்.[4]
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன