சில்சார் வானூர்தி நிலையம் (Silchar Airport) (ஐஏடிஏ: IXS, ஐசிஏஓ: VEKU) இந்தியாவின்அசாம் மாநிலத்தில் உள்ளது.[1] இந்த வானூர்தி நிலையம் 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்நிலையம் பாரைல் மலைத்தொடரின் (Barail range) அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலுக்கு அடுத்தபடியாக நான்காவது முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். ஆண்டிற்கு 2,30,000 பயணிகளைக் கையாளுகிறது.
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன