கான்பூர் வானூர்தி நிலையம் (Kanpur Airport) (ஐஏடிஏ குறியீடு:கேஎன்யூ,ஐசிஏஓ குறியீடு:விஐசிஎக்ஸ்) பொது மக்களின் பயன்பாட்டிற்கும், இந்திய இராணுவ உபயோகத்திற்கும் பயன்படும் இந்த விமான நிலையமானது இந்திய நாட்டில்உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்ததுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து இங்கிருந்து இந்தியாவின் பல பெரிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. சில காலங்கள் இங்கிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டு பின்னர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் கான்பூர் முதல் டெல்லி வரை துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஊருக்கு இயக்கப்படும் விமானங்கள் 72 இருக்கைகள் கொண்டவையாக உள்ளது.
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன