கடிய மூச்சுக்குழல் அழற்சி அல்லது தீவிர மூச்சுக்குழல் அழற்சி அல்லது தீவிர மார்புச்சளி நோய் (Acute bronchitis) என்பது தீ நுண்மங்களின் அல்லது பாக்டீரியாக்களின் தொற்றினால் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு அழற்சி நோயாகும். இந் நோய் சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நீடித்திருக்கக் கூடும். காற்றின் மாசுபடுதலாலும் தோன்றக்கூடும். குளிர்காலங்களில் பாதிப்பு அதிகமிருக்கும். புகைபிடிப்பவர்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள், நுரையீரல் நோயுடையவர்கள் எளிதில் பாதிக்கப்படுவர். இருமல், சளி உற்பத்தி போன்றனவும், மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பினால் மூச்சுவிடலில் சிரமமும், இழுப்பும் (wheezing) இந்நோயின் சிறப்பியல்புகளாகும். மருத்துவ சோதனையும் உமிழ்நீரில் உள்ள சளியில் நுண்ணுயிரியல் சோதனை போன்றவற்றால் நோய் உறுதிப்படுத்தப்படும். நோய்க்காரணி பாக்டீரியாவாக இருப்பின் நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுக்கப்படும். வைரசாயின் இவை கொடுக்கப்படுவதில்லை. வைரசினால் ஏற்பட்டிருப்பின் சாதாரணமாக ஓய்வேடுத்தல் பரிந்துரைக்கப்படும்