தீநுண்ம எதிர்ப்பி காமா (அ) இன்டெர்ஃபெரான் காமா (Interferon gamma; IFN-γ) என்பது இரண்டாம் பிரிவு இன்டெர்ஃபெரான்களில் உள்ள ஒரே உறுப்பினரான புரத இருபடி சைட்டோகைனாகும்[1]. முன்பு நோயெதிர்ப்பு இன்டெர்ஃபெரான் என்றழைக்கப்பட்ட இந்த சைட்டோகைன் தாவரச் சிகப்பணு திரட்டியினால் (phytohemagglutinin) தூண்டப்படும்போது மனிதவெள்ளையணுக்களிலிருந்து வெளிப்படுவதாக வீலாக் என்பவராலும், எதிர்ப்பியால் தூண்டப்பட்ட வெள்ளையணுக்களிலிருந்து வெளிப்படுவதாக பிறராலும் விவரிக்கப்பட்டது[2][3]. டியூபர்க்குலினால் தூண்டப்பட்ட சுண்டெலியின் வயிற்று உள்ளுறை வெள்ளையணுக்கள், டியூபர்க்குலினிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்ட புரதப் பெறுதியினால் ஆய்வகத்தில் செல் வளர்ப்பின்போது மீண்டும் தூண்டப்படும்போது பெறப்பட்ட தெளிவு, புடக வாயழற்சி தீநுண்மத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டது[4]. மனிதர்களில் இன்டெர்ஃபெரான் காமா புரதம் ஐ.எஃப்.என்-ஜி (IFNG) மரபணுவால் குறியீடுச் செய்யப்படுகிறது[5][6].
மேற்கோள்கள்
↑Gray PW, Goeddel DV (August 1982). "Structure of the human immune interferon gene". Nature298 (5877): 859–63. doi:10.1038/298859a0. பப்மெட்:6180322.
↑Wheelock, EF, Interferon-like virus inhibitor induced in human leukocytes by phytohemagglutinin. Science 149, 310-311, 1965. It was also shown to be produced in human lymphocytes
↑Green JA, Cooperband SR, Kibrick S (1969). "Immune specific induction of interferon production in cultures of human blood lymphocytes". Science164 (3886): 1415-1417. doi:10.1126/science.164.3886.1415. பப்மெட்:5783715.