அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 அல்லது அ.நோ.வ -10 (ICD-10) என்பது நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாட்டின் பத்தாவது பதிப்பு ஆகும். இப்பதிப்பில் எல்லா வகையான நோய்கள், அவற்றின் உணர்குறிகள், அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல் நலக் குறைபாடுகள் என்பன உரியமுறையில் வகைப்படுத்தப்பட்டு குழப்பம் ஏற்படாதவாறு சிறப்புக் குறியீடுகளைக் கொண்டுள்ளது.
இப்பதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983இல் ஆரம்பித்து 1992இல் நிறைவுபெற்றது.[1] நோய்களுக்கான குறியீட்டுப் பட்டியலில் அ.நோ.வ-9இல் இல்லாதவை புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதுவே தற்போது பயன்பாட்டில் உள்ள நோய்கள் வகைப்பாட்டு முறையாகும், எனினும் நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பட்டியல்
அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 பட்டியல் (ICD-10).[2]