இரண்டாம் காம்பிசெஸ்

இரண்டாம் காம்பிசெஸ்
அகாமனிசியப் பேரரசர்
மன்னர்களின் மன்னர்
பாரசீகப் பேரரசர்
பாபிலோனிய மன்னர்
எகிப்தின் பார்வோன்
ஆபிஸ் எனும் எகிப்திய எருதுக் கடவுளை (இடது) மண்டியிட்டு வணங்கும் எகிப்திய பார்வோன் காம்பிசெஸ் சிற்பம், கிமு 524
அகாமனியப் பேரரசர்
ஆட்சிக்காலம்530 – கிமு 522
முன்னையவர்சைரசு
பின்னையவர்பார்த்தியா
Co-rulerசைரசு (கிமு 530)
எகிப்திய பார்வோன்
ஆட்சிக்காலம்525 – சூலை 522 கிமு
முன்னையவர்மூன்றாம் சாம்திக்
பின்னையவர்பார்த்தியா
இறப்புகிமு 522
ஹமா
மரபுஅகமானிய வம்சம்
தந்தைசைரசு
தாய்காசாந்தனி
மதம்சொராட்டிரிய நெறி

இரண்டாம் காம்பிசெஸ் (Cambyses II) (ஆட்சிக் காலம்:கிமு 530 - கிமு 522) பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசை கிமு 530 முதல் 522 முடிய பனிரெண்டு ஆண்டுகள் ஆண்டவர். இவர் பேரரசர் சைரசுவின் மகன் ஆவார்.[1][2] இவர் அரியணை ஏறுவதற்கு முன்னர் கிமு 539-கிமு 538-களில் பண்டைய அண்மை கிழக்கின் வடக்கு பபிலோனியாவின் ஆளுநராக இருந்த போது பாபிலோன் மற்றும் சிப்பர் நகரங்களைக் கைப்பற்றியவர்.

கிமு 530-இல் இரண்டாம் காம்பிச்செஸ் அரியணை ஏறுவதற்கு முன்னர் தனது தந்தை சைரசுயுடன் இணை ஆட்சியாளராக இருக்கையில், சைரசு நடு ஆசியாவின் போர்க்குணம் கொண்ட நாடோடி மக்களை எதிர்த்து போரிடுகையில் இறந்தார். இதனால் இரண்டாம் காம்பிசெஸ் அகமானிசியப் பேரரசின் மணிமகுடம் ஏந்தினார்.

காம்பிசெஸ் தன் ஆட்சிக் காலத்தில் வட ஆப்பிரிக்காவின் எகிப்து, நூபியா மற்றும் குஷ் இராச்சியங்களையும், மத்தியதரைக் கடலின் தீவு நாடான சைப்பிரசையும் கைப்பற்றினார்.

கிமு 522-இல் பாரசீகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போரை அடக்குவதற்கு எகிப்திலிருந்து சிரியா வழியாக பாரசீகம் சென்று கொண்டிருந்த காம்பிசெஸ்சை, ஒரு நாடோடி கூட்டம் எய்திய அம்பால் தொடையில் பெருங்காயத்துடன் மூன்று வாரங்கள் கழித்து மெசொப்பொத்தேமியாவின் ஹமா எனும் நகரில் இறந்தார். மனைவி, குழந்தைகள் இன்றி இறந்த இரண்டாம் காம்பிசெஸ்சின் தம்பி பார்த்தியா அகமானிசியப் பேரரசின் அரியணை ஏறினார்.

இளமை வாழ்க்கை

பாரசீகப் பேரரசர் சைரசு தன் மகன் இரண்டாம் காம்பிசெஸ்சை கிமு 539-இல் வடக்கு பாபிலோனியாவின் ஆளுநராக நியமித்தார்.[3] கிமு 538 திசம்பரில், ஒன்பது மாதங்கள் கழித்து பேரரசர் சைரஸ், இரண்டாம் காம்பிசெஸ்சை பாபிலோனின் ஆளுநர் பதவிலிருந்து நீக்கினார். [3] இதனால் காம்பிசெஸ் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களான பாபிலோன் மற்றும் சிப்பர் நகரங்களில் காலம் கழித்தார்.[3]

பாபிலோனிய ஆவணங்களின்படி, பேரரசர் சைரசுடன், காம்பிசெஸ் அகாமனியப் பேரரசின் இணை ஆட்சியாளராக பதவி வகித்தார்.[3] சைரசுவின் இளைய மகன் பார்த்தியாவுக்கு நடு ஆசியாவின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.[4] சைரசு நடு ஆசியாவின் நாடோடிக் கூட்டங்களின் கிளர்ச்சிகளை ஒடுக்கச் சென்ற போது, அம்படிப்பட்டு இறந்தார்.[3] இதனால் அகாமனிசியப் பேரரசின் மணிமகுடத்தை இரண்டாம் காம்பிசெஸ் ஏற்றார்.[4]

படையெடுப்புகள்

சைப்பிரசை வெற்றி கொள்தல் மற்றும் எகிப்தின் மீதான போர் ஆயத்தப் பணிகள்

கிமு 556 முதல் கிமு 486 முடிய அகாமனிசியப் பேரரசின் படிப்படியான விரிவாக்கங்கள்

எகிப்தை கைப்பற்றுதல்

காம்பிசெஸ் தனது ஆட்சிக் காலத்தில் கிமு 525-இல் கப்பற்படை கொண்டு, மெம்பிசு நகரத்தைக் கைப்பற்றி பண்டைய எகிப்து இராச்சியத்தை அகமானியப் பேரரசின் கீழ் கொண்டு வந்தார்.[5] எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்ச ஆண்ட பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் பார்வோன் பாரசீகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டார்.[3] மேலும் காம்பிசெஸ் வட ஆப்பிரிக்காவின் லிபியா மற்றும் நுபியா இராச்சியங்களைக் கைப்பற்றினார்.[5]

தொடர் படையெடுப்புகள்

மேலும் கிரேக்கர்கள் அகமானிசியப் பேரரசின் மேலாண்மையை ஏற்று திறை செலுத்தினர். நூபியாவிற்கு தெற்கில் இருந்த குஷ் இராச்சியத்தைக் கைப்பற்றி எலிபெண்டைன் நகரத்தில் ஒரு பெரும் பாரசீகப் படையை நிலைநிறுத்தினார்.[6]

எகிப்தில் புதிய கொள்கைகள் நிறுவுதல்

எகிப்திய ஆபீஸ் கடவுளின் சின்னமான எருது

எகிப்திய அரச மரபுப்படி, இரண்டாம் காம்பிசஸ் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தின் பார்வோனாகவும், தலைமைப் பூசாரியாகவும் முடிசூட்டப்பட்டார்.[3] காம்பிசஸ் எகிப்தியக் கோயில்களையும், கடவுள் சிற்பங்களையும், பார்வோன்களின் கல்லறைகளையும் இடித்து அழித்தார். [3][7] எகிப்தின் மூன்று முக்கியக் கோயில்கள் மட்டுமே எகிப்தியர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.[3] இதனால் எகிப்திய கோயில் பூசாரிகளுக்கு வருவாய் இழந்து தவித்தனர்.[3]

நிர்வாகம்

இரண்டாம் காம்பிசெஸ் வெளியிட்ட தங்க நாணயம்

சைரசு மற்றும் காம்பிசெஸ் ஆட்சியில் நில வரி மற்றும் சுங்க வரி கட்டமைப்பு சீர் இன்றி இருந்தது. இருப்பினும் அரசின் கருவூலம் பொதுமக்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் சிற்றரசர்கள் வழங்கிய தங்க நாணயப் பரிசுகள் மற்றும் வரிகள் மூலம் நிறைந்தது.[8]

இறப்பும், வாரிசுகளும்

கிமு 522-இல் பாரசீகத்தில் நடந்து கொண்டிருந்த உள்நாட்டு கலவரத்தை அடக்க வேண்டி, காம்பிசெஸ், எகிப்திலிருந்து சிரியா வழியாக பாரசீகத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில், ஒரு நாடோடிக் கூட்டத்தினரின் அம்பு காம்பிசெசின் தொடையில் அடிபட்டு பெருங்காயம் அடைந்தார். காயம் ஆறாது மூன்று வாரம் கழித்து ஹமா எனுமிடத்தில் காம்பிசெஸ் உயிர் நீத்தார்.[3] ஆண் வாரிசு குழந்தை இன்றி இறந்த காம்பிசெஸ்சிற்குப் பின் அகாமனிசியப் பேரரசின் மணி மகுடம் அவரது தம்பி பார்த்தியாவிற்கு சூட்டப்பட்டது. [9]

இரண்டாம் காம்பிசெஸ் இறக்கும் போது, அகமானிசியப் பேரரசின் எல்லைகள் கிழக்கில் இந்து குஷ் மற்றும் நடு ஆசியாவின் சிர் தாரியா முதல் பண்டைய அண்மை கிழக்கில் மெசொப்பொத்தேமியா மற்றும் பண்டைய எகிப்து வரை விரிந்திருந்தது.[10]

அகாமனிசியப் பேரரசர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

  • Bachenheimer, Avi (2018). Old Persian: Dictionary, Glossary and Concordance. Wiley and Sons. pp. 1–799. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Briant, Pierre (2002). From Cyrus to Alexander: A History of the Persian Empire. Eisenbrauns. pp. 1–1196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-120-7. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Brosius, Maria (2000). "WOMEN i. In Pre-Islamic Persia". Encyclopaedia Iranica, Vol.  
  • Dandamayev, Muhammad A. (2000). "Achaemenid taxation". Encyclopaedia Iranica.  
  • Dandamayev, Muhammad A. (1993). "Cyrus iii. Cyrus II The Great". Encyclopaedia Iranica, Vol. IV, Fasc. 7. 516-521. 
  • Dandamayev, Muhammad A. (1990). "Cambyses II". Encyclopaedia Iranica, Vol. IV, Fasc. 7. 726-729. 
இரண்டாம் காம்பிசெஸ்
முன்னர் அகமானிசியப் பேரரசர்
கிமு 530 – கிமு 522
பின்னர்
பார்த்தியா
முன்னர் எகிப்தின் பார்வோன்
கிமு 525 – கிமு 522



Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!