தாரசு மலைகள் அல்லது டாரஸ் மலைத்தொடர் (ஆங்கிலம்: Taurus Mountains; துருக்கி: Toros Dağları; பண்டைக் கிரேக்கம்: Ὄρη Ταύρου), ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள தெற்கு துருக்கியில் உள்ள ஒரு சிக்கல் மிகுந்த மலைத்தொடரான இது, மேற்கு ஆசிய தென் துருக்கியின் மத்தியதரைக் கடலோரப் பிளவு பகுதியிலிருந்து, 'அனத்தோலியா' என்று அழைக்கப்படும் அனத்தோலியாபீடபூமியின் தெற்குத் தென்கிழக்கு வரை வியாபித்துள்ளது.[1] மேலும், ஆடாலியா (Adalia) வளைகுடாவிலிருந்து, மத்தியதரைக் கடல் எனப்படும் நடுநிலக் கடலில் பாயக்கூடிய, துருக்கியின் மிக நீளமான ஆறான சேகான் ஆற்றின் (Seyhan River) வடிநிலம் வரை வளர்ந்துள்ள இம்மலைத் தொடர், வடகிழக்கில் இதன் தொடர்ச்சியாகச் செல்லும் எதிர் மலைத்தொடர் எனப்படும், இந்த மலைத்தொடரில், 11,000 அடிக்கும் மேற்பட்ட உயரமான பல உச்சி முகடுகள் இருக்கின்றன.[2] யுரேசிய அல்பிட் நிலப் பட்டையில் (Alpide belt in Eurasia) அமைந்துள்ள டாரஸ் மலைத்தொடர், கிழக்கில் எகிர்திர் ஏரியில் (Lake Eğirdir) வளைந்து பரவியுள்ளது. மேலும், மேற்கின் மேல்பகுதியில், புறாத்து ஆறு, மற்றும் தைகிறிசு ஆறு போன்ற ஆறுகள் இம்மலையின் ஊடாக பாய்கிறது.[3]
வரலாறு
முந்தைய வரலாற்றிலிருந்து, உரோமானிய ஆரம்பகாலம்
பூர்வக் காலத்தில் பொதுவாக காளை (ஆண் மாடு), மற்றும் கிழக்கத்தியப் புயல் போன்ற சின்னங்களை கடவுளாக சித்தரித்து இருந்துள்ளனர், ஆங்கிலத்தில் டாரஸ் (Taurus) என்றால் காளை, ரிசபம் இடபம் எனும் பொருள் படுகிறது எனவே இந்த மலைத்தொடருக்கு இப்பெயர் வந்துள்ளது. மேலும் இம்மலைத் தொடரில், பல இடங்களில் பண்டைய புயல் கடவுளின் கோயில்கள் காணப்படுகிறது.[4][5] இந்த மலைப்பகுதியில் இடிமின்னலுடன் கூடிய பெய்யும் மழை, புயல் கடவுளான ஆதாத் (Hadad) உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த பெருமழையால் புறாத்து ஆறு, மற்றும் தைகிறிசு ஆறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் நிலங்களுக்கு உரங்களைக் கொண்டுவருவதாக பண்டைய சீரியர்கள் (Syrians) கருதப்பட்டனர்.[6] அங்கு உருவாகும் சூறாவளிகள் அநேகமாக அக்கால கிழக்கத்திய பல்வேறு புயல்-கடவுளர்களே மூலகர்த்தாக்கள் என, தற்காலத்திய அறிஞர்கள் தங்கள் சாத்தியமான வகையில் முந்தைய தோற்றம் உள்ள டாரஸ் மலைகள் இருப்பாதாக கூறுகிறாகள்.[7]
பிற்பகுதி உரோமானிய காலத்திலிருந்து தற்போது வரை
முதல் உலகப் போர் நடந்தபோது, டாரசு மலைகள் வழியாக செருமனி மற்றும் துருக்கிய இருப்புப்பாதை அமைப்பில் நேச நாடுகளுடன் ஒரு முக்கிய தொலைநோக்கு இலக்கை நிரூபித்தது. மேலும் இந்த இப்பிராந்தியத்தில் குறிப்பாக, ஒட்டோமான் பேரரசுக்கு எதிரான தாக்குதலை முடிவடைய போர் நிறுத்த உடன்படிக்கை கூட்டாளிகளுக்கிடையில் சரணடைவது பற்றி திட்டமிடப்பட்ட, ஒரு மூலோபாயமுள்ள செயல்திறன்மிக்க கட்டுப்பாட்டின் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.[8]
தாரசு மலைகளைக் கீழ்க்கண்டவாறு கிழக்கிலிருந்து இருந்து மேற்காக மூன்று தொடராக பிரிக்கப்படுகின்றன.
1 மேற்கத்திய டாரஸ் (பட்டி டோரோஸ்லர், Batı Toroslar)
அக்தக்லர் (Akdağlar), பே மலைத்தொடர் ( Bey Mountains), கட்ரங்சிக் மலை (Katrancık Mountain), கெயிக் மலை ( Geyik Mountain).[9]
2 மத்திய டாரஸ் (ஓர்ட்டா டோரோஸ்லர், Orta Toroslar)
அக்கலி மலைகள் (Akçalı Mountains), போல்கர் மலைகள் (Bolkar Mountains), எதிர்ப்பு டாரஸ் மலைகள் (Anti-Taurus Mountains), அளடக்லர் (Aladaglar).[9]
3 தென்கிழக்கு டாரஸ் (குனிடோகு, Güneydoğu Toroslar)
நுரக் மலைகள் (Nurhak Mountains), மாலத்திய மலைகள் (Malatya Mountains), மேடன் மலைகள் (Maden Mountains), கெனக் மலைகள் (Genç Mountains), பிட்லிஸ் மலைகள் (Bitlis mountains).[9]
நிலவியல்
டாரஸ் மாலைத் தொடரின் வடகிழக்கிலுள்ள, போல்கர் (Bolkar Mountains), மற்றும் அலடக்லர் (Aladaglar) மலைத்தொடர் பகுதிகளில், சுண்ணக்கல் சிதைந்த படிவு சேர்ந்த நிலப்பகுதியாகவும், மற்றும் நீர் வீழ்ச்சிகளால் இயற்கை நிலக்காட்சிகளை அமைத்துள்ளது. அரித்து அழிந்த, நிலத்தடி ஆறுகள், மற்றும் ஆசியாவின் பெரிய குகைகள் சில அங்குள்ளன. மேலும், "மானவ்கட் ஆறு" (Manavgat River) மற்றும் "பெய்டாக்லறி" ( Beydaglari range) பரப்பெல்லைகள் கொண்ட தெற்கு சரிவுகள் இப்பகுதியில் உருவானதாகும்.[10]
மத்திய டாரஸ்
மத்திய டாரஸ் உள்ள பகுதியில் அநேகமாக மெர்சின் மற்றும் ஆண்தலிய வடகிழக்கு பகுதியை படிமம் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.
↑Saggs, H.W.F. The greatness that was Babylon: a survey of the ancient civilization of the Tigris-Euphrates Valley, Sidgwick & Jackson, 2nd Revised edition, 1988, p.380. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0283996234
↑"Tarsus". biblehub.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-07.