நிப்பூர்

நிப்பூர்
நிப்பூர் கோயிலின் சிதிலமடைந்த மேடை மீது, அமெரிக்கத் தொல்லியலாளர்கள் கிபி 1900ல் செங்கற்களால் கட்டிய சுவர்
நிப்பூர் is located in ஈராக்
நிப்பூர்
Shown within ஈராக்
இருப்பிடம்நுஃபார், அல் குவாதிசியா ஆளுனரகம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்32°07′35.2″N 45°14′0.17″E / 32.126444°N 45.2333806°E / 32.126444; 45.2333806
வகைதொல்லியல் களம்

நிப்பூர் (Nippur) (சுமேரியம்: நிப்ரு), அக்காதியம்: நிப்பூர்) சுமேரியாவின் பண்டைய அண்மைக் கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும்.

இந்நகரம் சுமேரியர்களின் கடவுளான மழை மற்றும் அண்டத்தின் ஆட்சியாளரான கடவுள் என்லிலுக்கு சிறப்பிடம் தருகிறது.

பண்டைய நிப்பூர் நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் அல் குவாதிசியா ஆளுனரகத்தின், நுஃபார் சிற்றூரில் உள்ளது.

அமைவிடம்

டைகிரிஸ் ஆற்றின் கரையில், பாக்தாத் நகரத்திலிருந்து தென்கிழக்கில் 160 கிமீ தொலைவில் பண்டைய நிப்பூர் தொல்லியல் நகரம் உள்ளது.

வரலாறு

நிப்பூர் நகரம் தனது சொந்த அரசியல் மேலாதிக்கத்தை என்றும் பேணியதில்லை. ஆனால் ஊர், பாபிலோன், ஈலம் போன்ற மற்ற நகர ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. நிப்பூர் நகரம் என்லில் கடவுளின் கோயில் அமைந்திருந்ததால் புனித நகரமாக விளங்கியது.

சுமேரியாவின் கிஸ் நகர ஆட்சியாளர் என்லில் கடவுளுக்கான கோயிலை நிப்பூரில் முதலில் அமைத்தார்.[1]

அக்காத், ஊர் மற்றும் மற்றும் பழைய பாபிலோனியப் பேரரசு காலத்தில்

பேரரசர் அம்முராபி காலத்திய பழைய பாபிலோனியப் பேரரசில் நிப்பூர் நகரம்

கிமு 3000ன் இறுதியில் கிழக்கு செமிடிக் மொழிகளில் ஒன்றான அக்காதியம் பேசிய அக்காடிய ஆட்சியாளர்கள் நிப்பூர் நகரத்தை கைப்பற்றினர்.

அக்காடியப் பேரரசு வீழ்ந்த காலத்தில் நிப்பூர் நகரத்திற்கு உரிய புனித நகரம் என்ற பெருமையை பாபிலோன் நகரத்திற்கு அளிக்கப்பட்டது.

அக்காடிய ஆக்கிரமிப்பிற்குப் பின், ஊர் நகர மூன்றாவது ஊர் வம்ச மன்னர் ஊர் நம்மு என்பவர் நிப்பூர் நகரத்தில் நரம் சின் மற்றும் ஊர் நம்மு கோயில்களை எழுப்பினார்.

பிந்தைய வரலாறு

கிமு 8ம் நூற்றாண்டில் நிப்பூர் நகரத்தை ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசர் இரண்டாம் சர்கோன் காலத்திய கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் செலூக்கியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் நிப்பூர் நகரத்தின் என்லில் தெய்வத்திற்கான கோயில், கோடையாக மாற்றபட்டது.

பின்னர் நிப்பூர் கோட்டைகளை கிமு 250ல் பார்தியர்கள் சீரமைத்தனர். சசானியப் பேரரசு காலத்தில் நிப்பூர் நகரம் பாழடைந்து, சிறு கிராமமாக நிப்பூர் நகரம் காட்சியளித்தது.

தொல்லியல்

வணங்கி நிற்கும் பெண் சிலை, நிப்பூர் தொல்லியல் களம், காலம் கிமு 2600 - கிமு 2500[2]

நிப்பூர் தொல்லியல் களத்தில் 30 மீட்டர் உயரம் கொண்ட பெரிய மண்மேடு கண்டெடுக்கப்பட்டது. இதனை அரேபியர்கள் நூப்பர் என்றனர். இத்தொல்லியல் களத்தை 1851ல் சர் ஆஸ்டின் ஹென்றி லயர்டு என்பவர் முதலில் அகழாய்வு செய்தார்.[3] 1889 - 1890களில் ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக்கத்தின் தொல்லியல் அறிஞர்கள் மீண்டும் விரிவாக அகழாய்வு செய்தனர்.[4] [5] [6][7]

சிகாகோ கீழ்திசை நிறுவத்தினர் நிப்பூர் தொல்லியல் களத்தை 1948 முதல் 1990 வரை 19 முறை அகழாய்வு செய்தனர்.[8][9][10][11][12][13][14][15] [16] [17] நிப்பூர் தொல்லியல் களத்தில் ஏழு களிமண் சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தின் உள்ளது.[18]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Jean-Jacques Glassner, Mesopotamian Chronicles, Brill Academic, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-13084-5
  2. Standing female worshiper
  3. Discoveries among the Ruins of Nineveh and Babylon; with Travels in Armenia, Kurdistan, and the Desert: Being the Result of a Second Expedition Undertaken for the Trustees of the British Museum, Austen H. Layard, Harper, 1856 (also in reprint by Kessinger Publishing, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-548-16028-7)
  4. Nippur, or Explorations and Adventures on the Euphrates; the narrative of the University of Pennsylvania expedition to Babylonia in the years 1888-1921, Volume 1, John Punnett Peters, G. P. Putnam's sons, 1897
  5. Nippur, or Explorations and Adventures on the Euphrates; the narrative of the University of Pennsylvania expedition to Babylonia in the years 1888-1921 -, Volume 2, John Punnett Peters, G. P. Putnam's sons, 1897
  6. Explorations in Bible Lands during the 19th Century, H.V. Hilprecht, 1903
  7. Fisher, Clarence Stanley, Excavations at Nippur: plans, details and photographs of the buildings, with numerous objects found in them during the excavations of 1889, 1890, 1893-1896, 1899-1900: v. 2 : The Fortress, Philadelphia : Department of Archaeology of University of Pennsylvania, 1907
  8. Nippur I, Temple of Enlil, Scribal Quarter, and Soundings: Excavations of the Joint Expedition to Nippur of the University Museum of Philadelphia and the Oriental Institute of the University of Chicago பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம், Donald E. McCown and Richard C. Haines, Oriental Institute Publication 78, 1967
  9. Cuneiform Texts from Nippur: The Eighth and Ninth Seasons பரணிடப்பட்டது 2012-07-30 at the வந்தவழி இயந்திரம், Giorgio Buccellati and Robert D. Biggs, Oriental Institute Assyriological Studies 17, 1969
  10. Excavations at Nippur: Eleventh Season பரணிடப்பட்டது 2012-03-19 at the வந்தவழி இயந்திரம், McGuire Gibson et al., Oriental Institute Communication 22, 1976, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-62339-4
  11. Excavations at Nippur: Twelfth Season பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம், McGuire Gibson et al., Oriental Institute Communication 23, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-918986-22-2
  12. Nippur, Volume 2. The North Temple and Sounding E: Excavations of the Joint Expedition to Nippur of the American Schools of Oriental Research and the Oriental Institute of the University of Chicago பரணிடப்பட்டது 2012-07-31 at the வந்தவழி இயந்திரம், D. E. et al., Oriental Institute Publication 97, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-918986-04-4
  13. Nippur, Volume 3: Kassite Buildings in Area WC-1 பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம், R. L. Zettler, Oriental Institute Publication 111, 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-918986-91-5
  14. Nippur, Volume 4: The Early Neo-Babylonian Governor's Archive from Nippur பரணிடப்பட்டது 2012-07-29 at the வந்தவழி இயந்திரம், S. W. Cole, Oriental Institute Publication 114, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-885923-03-1
  15. Nippur V: The Area WF Sounding: The Early Dynastic to Akkadian Transition பரணிடப்பட்டது 2012-07-31 at the வந்தவழி இயந்திரம், Augusta McMahon, Oriental Institute Publication 129, 2006
  16. McGuire Gibson, James A. Armstrong and Augusta McMahon, The City Walls of Nippur and an Islamic Site beyond: Oriental Institute Excavations, 17th Season, 1987, Iraq, vol. 60, pp. 11-44, 1998
  17. Gibson, McGuire; McMahon, A. (1995), "Investigation of the Early Dynastic-Akkadian Transition: Report of the 18th and 19th Seasons of Excavation in Area WF, Nippur", Iraq, 57: 1–39, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/4200399
  18. The Resurrection of Seven Clay Coffins from Nippur

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நிப்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!