புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனைஅக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர்அசூர்பனிபால்கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[2] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார்.
புது பாபிலோனியப் பேரரசில் கிமு 639 முதல் பபிலோனியா தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின் படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின்ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார்.
பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை
மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த புதுப் பாபிலோனியப் பேரரசில் யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் பாய்வதால், வேளாண்மைத் தொழில் செழித்தது. வேளாண் நிலங்களுக்கு ஆற்று நீர் பாய்வதற்கு வசதியாக கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அமைத்தனர். பாபிலோனியர்களின் நகரங்களான பாபிலோன் மற்றும் நினிவே தன்னாட்சியுடன் நிர்வகிக்கப்பட்டது. கோயிலை மையப்படுத்தி நகரங்கள் இருந்தது. நீதிமன்றங்களில் வழக்குகள் உடனடியாக விசாரித்து தீர்ப்புகள் அறிவித்தனர்.
87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் நடைபெற்ற ஓபிஸ் போரில்அகாமனிசியப் பேரரசர்சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில், புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.
↑Talley Ornan, The Triumph of the Symbol: Pictorial Representation of Deities in Mesopotamia and the Biblical Image Ban (Göttingen: Academic Press Fribourg, 2005), 4 n. 6