டெல் பராக்

நகர் அல்லது நவார்
டெல் பிராக்

Tell Brak
நகர் இராச்சியத்தின் தொல்லியல் களம்
டெல் பராக் is located in சிரியா
டெல் பராக்
Shown within சிரியா
மாற்றுப் பெயர்நகர், நவார்
இருப்பிடம்காபூர் கிராமம், அல்-அக்சா ஆளுரநகம், சிரியா
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்36°40′03.42″N 41°03′31.12″E / 36.6676167°N 41.0586444°E / 36.6676167; 41.0586444
வகைSettlement
பரப்பளவு40 எக்டேர்கள் (99 ஏக்கர்கள்).[1]
உயரம்40 மீட்டர்கள் (130 அடி).[1]
வரலாறு
காலம்கற்காலம், வெண்கலக் காலம், பண்டைய அண்மை கிழக்கு
கலாச்சாரம்ஹலாப் பண்பாடு, உபைது பண்பாடு, உரூக் பண்பாடு, கிஷ் பண்பாடு,ஹுரியப் பண்பாடு
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1937–1938, 1976–2011
அகழாய்வாளர்மாக்ஸ் மல்லோவன், டேவிட் ஓட்ஸ் மற்றும் ஜோன் ஓட்ஸ்
பொது அனுமதிஆம்
இணையத்தளம்tellbrak.mcdonald.cam.ac.uk
நகர் அல்லது நவார் இராச்சியம்
கிமு 2600–கிமு 2300
கிமு 2340ல் நகர் இராச்சியம்
கிமு 2340ல் நகர் இராச்சியம்
தலைநகரம்நகர்
பேசப்படும் மொழிகள்எப்லா மொழி
சமயம்
பண்டைய மெசொப்பொத்தேமியா சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 2600
• முடிவு
கிமு 2300
தற்போதைய பகுதிகள்சிரியா

நகர் அல்லது டெல் பராக் (Tell Brak - Nagar, Nawar) பண்டைய அன்மை கிழக்கின் தற்கால சிரியாவில் உள்ள அழிந்து போன பண்டைய நகரம் ஆகும். இப்பண்டைய நகர் நகரம் 130 ஹெக்டேர் பரப்புடன், 40 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச் சுவர்களுடன் விளங்கியது.[2] [3] [4]

சிதைந்து போன நகர் இராச்சியத்தின் தொல்லியல் களங்கள், தற்கால சிரியா நாட்டில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றின் மேற்கு கரையில், அல் அசகா ஆளுநரகத்தில், காபூர் கிராமத்தில் உள்ளது.

இந்நகரத்தின் உண்மையான பெயர் அறியப்படவில்லை. [5] இதன் தற்போதைய பெயர் டெல் பராக் ஆகும். [6]கிமு மூன்றாவது ஆயிரமாவது ஆண்டின், இரண்டாம் நடுப்பகுதியில் இந்நகரத்தின் பெயர் நகர் என்றும், பின்னர் நவார் என்றும் அறியப்படுகிறது. செமிடிக் மொழியில் நகர் என்பதற்கு வேளாண்மைக்கு ஏற்ற இடம் என்று பொருள் ஆகும்.[7] பண்டைய நகர் அல்லது நவார் இராச்சியத்தின் சிதிலங்கள் காணப்படும் இடத்தை டெல் பராக் என்பர்.

வரலாறு

கிமு ஏழாம் ஆயிரமாவது ஆண்டில் சிறு நகரமாக இருந்த நகர் எனப்படும் நவார் நகரம், பின்னர் கிமு நான்காம் ஆயிரமாவது ஆண்டில் வடக்கு மெசொப்பொத்தேமியாவில் பெரிய நகர இராச்சியமாக மாறியது. மேலும் இது பாபிலோன் போன்ற தெற்கு மெசொப்பொத்தேமியா நகரப் பண்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.

கிமு மூன்றாம் ஆயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில், உரூக் ஆட்சியின் போது, நகர் இராச்சியத்தின் பரப்பளவு சுருங்கியது. பின்னர் கிமு 2600ல் மீண்டும் நகர் எனும் இவ்விராச்சியத்தின் பகுதிகள் விரிவடைந்தது. காபூர் சமவெளியை ஆண்ட இந்த இராச்சியத்திற்கு நகர் எனும் நகரம் தலைநகரமான விளங்கியது. நகர் இராச்சியம் கிமு 2600 முதல் கிமு 2300 முடிய தன்னாட்சியுடன் ஆளப்பட்டது

கிமு 2300ல் அக்காடியப் பேரரசின் படையெடுப்பால் நகர் இராச்சியம் அழிக்கப்பட்டு, மீண்டும் அவர்களால் கட்டப்பட்டப்பட்டது. [8] பின்னர் கிமு இரண்டாம் ஆயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் நகர் இராச்சியம், ஹுரியர்களால் ஆளப்பட்டது. கிமு 1500ல் மித்தானி இராச்சியத்தினரின் மையமாக நகர் இராச்சியம் விளங்கியது. [9]

கிமு 1300ல் பழைய அசிரியப் பேரரசால் நகர் இராச்சியம் அழிக்கப்பட்டது.

அதன் பின்னர் நகர் இராச்சியம் தனது இழந்த பெருமையை மீட்க இயலவில்லை. அப்பாசியக் கலீபகத்தின் ஆவணங்களில் நகர் இராச்சியம் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை.

நகர் இராச்சியத்தில் செமிடிக் மக்கள், ஹலாப் மக்கள், அமோரிட்டு மக்கள், ஹுரியத் மக்கள் போன்ற பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்தனர்.

துவக்க காலத்திருந்து நகர் இராச்சியம் ஒரு சமயத்தின் மையமாக விளங்கியது. இதன் புகழ் பெற்ற கண் கோயிலின் முக்கியக் கடவுள் பெலட் - நகர் ஆகும். இக்கடவுளை காபூர் சமவெளி பிரதேசத்தில் கொண்டாடினர்.

தீட்டப்பட்ட நவரத்தினகற்கள், மணிக்கற்களின் செதுக்குவேலை, கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்கள் போன்றவற்றிற்கு நகர் இராச்சியம் புகழ் பெற்றது.

நகர் இராச்சியம் அனதோலியா, லெவண்ட் மற்றும் தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையில் இருந்ததால், இது புகழ் பெற்ற வணிக மையமாக விளங்கியது.

1937ல் நகர் தொல்லியல் களத்தை மேக்ஸ் மல்லோவான் என்பவர் அகழாய்வு மேற்கொண்டார். பின்னர் 1979 முதல் 2011 முடிய பல்வேறு அகழாய்வாளர்கள் நகரில் தொல்லியல் பணிகள் மேற்கொண்டனர்.

டெல் பிராக்கின் காலவரிசைகள்

தொல்லியல் களங்கள்

அகழாய்வில் கண்டெடுத்த சிதைந்த நகர் நகரத்தின் நான்கு பெரும் கல்லறைகள் கிமு 3800 - 3600 காலத்தவைகள் ஆகும்.[10]

நகரின் பண்டைய கண் கோயில் பல தளங்களுடன் கட்டப்பட்டிருந்தது.[11] [12][11][13]

மாரி நகரத்தின் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகளிலிருந்து பண்டைய நகர் இராச்சியம் குறித்தான தொன்மையான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் எப்லா இராச்சியத்தின் களிமன் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் நகர் இராச்சியம் குறித்தான செய்திகள் கிடைக்கப் பெறுகிறது.[14]

நகர் இராச்சியத்தின் தொல் பொருட்கள்

டெல் பராக்கின் ஆட்சியாளர்கள்

மன்னர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
துவக்க காலத்தில் மூத்தோர் சபையினரால் ஆளப்பட்டது[15]
அக்காடியப் பேரரசுக்கு முன் நகர் இராச்சியம் (கிமு 2600 – 2300)
முதலாம் மாரன் கிமு 24ம் நூற்றாண்டு [16]
துவக்க அக்காடியப் பேரரசுக் காலம், கிமு 23ம் நூற்றாண்டின் துவக்கத்தில்.[8]
உர்கிஸ் மக்களின் ஆட்சியில்[17][18]
அக்காடியப் பேரரசர் நரம் - சின்னின் கட்டுப்பாட்டில் [19]
நகரின் பிந்தைய அக்காடிய ஆட்சி
தால்பஸ்-அட்டிலி கிமு மூன்றாம் மூவாயிரம் ஆண்டின் முடிவில்[20] தன்ன்னை நகர் இராச்சியத்தின் மகனாக அறிவித்துக் கொண்டவர்.[21]
மாரி, மித்தானி, அசிரியர்கள் போன்ற வெளி நாட்டு மன்னர்களின் ஆட்சி [22] [23] [24] [25]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tell Brak
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!