சாட் அல் அராப் ஆறு (Shatt al-Arab (அரபு மொழி: شط العرب, River of the Arabs),[2] இதனை ஆர்வாந்து ரூத் (Arvand Rud) என்றும் அழைப்பர் (பாரசீக மொழி: اروندرود, Swift River), ஈராக்கில் பாயும் புறாத்து ஆறு, டைகிரிசு ஆறுகள் மற்றும் ஈரானின்காருன் ஆறு தெற்கு ஈராக்கில் பசுரா நகரத்திற்கு அருகில் அல்-குர்னாப் எனுமிடத்தில் கலந்து சாட் அல் அராப் ஆறு எனப்பெயர் பெறுகிறது. சாட் அல் அராப் ஆறு தெற்கு ஈராக்கில் 200 கிலோ மீட்டர் (120 மைல்) தொலைவிற்கு பாய்ந்து பின்னர் பாரசீக வளைகுடாவில் கலக்கிறது. இதன் வடிநிலப்பரப்பு 8,84,000 சதுர கிலோ மீட்டர் (3,41,000 சதுர மைல்) ஆகும்.