அப்சு (Abzu or Apsu) (ஆப்பெழுத்து:|𒍪}} கிரேக்கத்தில் அப் எனில் நீர் சு எனில் ஆழத்தில் என்று பொருள் [1]). மேலும் சமசுகிருத மொழியில் அப்சு என்பதற்கு நன்னீர் என்றும் பொருளாகும். சுமேரியர்களின் சமயத்தின் படி, அப்சுக் கடவுள் சுமேரியர்கள் மற்றும் அக்காதிய மக்களின் நன்னீர் கடவுள் ஆவார். பாதாளம் மற்றும் பூமியில் உள்ள ஆறுகள், ஓடைகள், ஏரிகள், நீர் ஊற்றுகள், குளங்கள் போன்ற நன்நீர் நிலைகளுக்கு அப்சு கடவுள் அதிபதி ஆவார். மனிதர்கள் படைக்கப்படுவதறு முன்னர் என்கி கடவுள், அவரது ஆலோசகர் இசிமூத் ஆகியோர் பெருந்தெய்வம் அப்சுவின் கீழ் இருந்தனர்.
கிமு 630 ஆண்டின் பாபிலோனிய சமய இலக்கியங்களில் அப்சு கடவுளை, தேவதை தரத்திற்கு கீழறக்கி வைத்திருந்தனர்.[2]