ஜெர் (Djer (or Zer or Sekhty)[1] பண்டைய எகிப்தை ஆண்ட முதலாம் வம்சத்தின் (கிமு 3100 – கிமு 2900) மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் கிமு 3000 ஆண்டில் பண்டைய எகிப்தை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் மெம்பிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு எகிப்தை ஆண்டார்.
இவர் கிமு 31-ஆம் நூற்றாண்டின் நடுவில் வரை வாழ்ந்தார்.[2] இவரது மம்மியின் முன் கை மற்றும் இவரது மனைவியின் மம்மியும் எகிப்தியவியல் அறிஞர் பிளிண்டர் பெட்ரி என்பவர் அகழாய்வில் கண்டுபிடித்தார்.[3][4]
இவரது பெயர் பலெர்மோ கல், அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களின் குறுங்கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
ஜெர் மற்றும் அவரது தந்தை ஹோர்-ஆகாவின் கல்லறைகள் அபிதோஸ் நகரத்திற்கு அருகே உள்ள உம் எல்-காப் பகுதியில் அகழாய்வில் கண்டுபிடிக்கபட்டது.