எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் (Twenty-sixth Dynasty of Egypt or Dynasty XXVI, 26th Dynasty or Dynasty 26) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முதல் எகிப்திய வம்சம ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தில் (வடக்கு எகிப்து) பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிமு 664 முதல் கிமு 525 முடிய 139 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பண்டைய எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மக்களின் அரச வம்சம் முடிவுற்றது.
கிமு 656-இல் பண்டைய அண்மை கிழக்கின் புது அசிரியப் பேரரசின் பகுதிகளை கைப்பற்ற எகிப்தின் 25-வது வம்சத்தவர்கள முயன்ற போது, புது அசிரிய இராச்சியத்தின் பேரரசர் அசூர்பனிபால், 25-ஆம் வம்சத்தின் படையினரை விர்ட்டியடித்ததுடன், இவ்வம்சத்தினர் ஆண்ட குஷ் இராச்சியம், மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை கைப்பற்றினார். அசிரியர்கள் குஷ் இராச்சியம் மற்றும் எகிப்திய பகுதிகளை ஆள்வதற்கு இருபத்தி ஆறாம் வம்சத்தவர்களை தங்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக நியமித்தனர். 26-வது வம்சமே எகிப்தியர்களின் இறுதி வம்சம் ஆகும். பின்னர் கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பண்டைய எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மக்களின் அரச வம்சம் முடிவுற்றது..[1]
எகிப்தின் 26-வது வம்ச மன்னர்கள், இருபத்தி நான்காம் வம்சத்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார்.[2]