முதலாம் டேரியஸ் தன் பேரரசை மாகாணங்களாகப் பிரித்து, அதனை சத்திரபதிகள் எனும் ஆளுநர்களின் கீழ் கொண்டு வந்தார். அரமேய மொழியை அரச மொழியாக்கியவர். பேரரசு முழுவதும் ஒரே நாணய முறை மற்றும் எடை மற்றும் அளவுகோள்கள் முறைகளை நடைமுறைப்படுத்தினார்.[7]
சூசா, பசர்கடே, பெர்சப்பொலிஸ், பாபிலோன் மற்றும் எகிப்திய நகரங்களில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கினார். பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட பெஹிஸ்ட்டன் கல்வெட்டுகளில், தனது போர் வெற்றிகளையும், தன் வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகக் குறித்துள்ளார்.
கிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசு, தனது வரலாற்று நூலின் மூன்றாம் பகுதியில், அகாமனியப் பேரரசர்கௌதமன் எனும் பார்த்தியாவிடமிருந்து பேரரசை முதலாம் டேரியஸ் பறித்துக்கொள்வது முதல், டேரியசின் ஆட்சிக் காலம் முடியும் வரை விளக்கப்பட்டுள்ளது.[8]
படையெடுப்புகள்
தனது அகாமனியப் பேரரசை நன்கு வலுப்படுத்திக் கொண்ட டேரியஸ், எகிப்திய மன்னர் பார்வோன், முதலாம் காம்பிசஸ் உடனான போரில் வென்று, எகிப்தை அகமானியப் பேரரசில் இணைத்தார். [9]
டேரியசின் தொடர் படையெடுப்புகளால் மேற்கில் பால்கன், திரேசு, மாசிடோனியா, பல்கேரியா பகுதிகளையும், கிழக்கில் சிந்து சமவெளி வரை தனது அகாமனியப் பேரரசை விரிவுபடுத்தினார்.
கிமு 516 - 515 குளிர்காலத்தில் பேரரசர் டேரியஸ் காந்தாரத்தில் தங்கி, சிந்து சமவெளியைக் கைப்பற்றி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். கிமு 515ல் சிந்து சமவெளியையும்; அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வென்றார்.[10]
பின்னர் தற்கால பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து, எகிப்திற்கு கடல் வழிப் கப்பல் பாதைக்கு வித்திட்டார்.
பின்னர் போலன் கணவாய் வழியாக பாரசீகதிற்கு திரும்பினார்.
பாபிலோன் கிளர்ச்சி
கௌதமா என்ற பார்த்தியாவின் கொலைக்குப் பின் கிழக்கு அகாமனிசியப் பேரரசு முழுவதும், குறிப்பாக அனதோலியா மாகாணத்தின் ஐயோனியாவின் கிரேக்கர்களின் பெருங்கிளர்ச்சிகள் பரவியது. எனவே பேரரசு முழுவதும் படைகளை அனுப்பி கலவரங்களை ஒடுக்கி தன்னை பாரசீகத்தின் பேரரசர் என்பதை டேரியஸ் நிலைநாட்டினார்.
பாபிலோனில் மூன்றாம் நெபுகத்நேசர் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. இக்கிளர்ச்சிகளின் போது, டேரியசின் படைகள் பாபிலோன் நகரத்திலிருந்து பின்வாங்கியது.
பின்னர் பெரும் படைகளை திரட்டி வந்து பாபிலோனை முற்றுகையிட்டார். ஒன்றரை ஆண்டுக்களுக்குப் பின்னரே, பேரரசர் டேரியசின் படைகள் தந்திரமாக பால்பிலோனை கைப்பற்றி கிளர்ச்சிகளை அடக்க முடிந்தது. [11]
டேரியசின் பாரசீகப் படைகள் பாபிலோன் கிளர்ச்சியை அடக்கச் சென்ற நேரத்தில், நடு ஆசியாவின் நாடோடி மக்களான சிதியர்கள், பாரசீகத்தைக் கைப்பற்றி சேதங்களை விளைவித்தனர்.
அசிரியா, பாபிலோன், ஈலாம் பகுதிகளில் நடைபெற்ற பெருங் கிளர்ச்சிகளை அடக்கிய டேரியஸ் தனது படைகளுடன் பாரசீகத்திற்கு திரும்பி வந்து, சிதியர்களை அடித்துத் துரத்தினார். [12]
ஐரோப்பிய சிதியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்
கிழக்கு பாரசீகத்தின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மக்களான சிதியர்கள், சிறிது காலம் பாரசீகத்தை கைப்பற்றி சூறையடியாவர்கள். மேலும் நடு ஆசியாவின்தன்யூப் ஆறு மற்றும் கருங்கடலிற்கிடையே உள்ள வணிகப் பாதையை அடைத்து, பாரசீகத்தின் வணிகத்தை சீர்குலைத்தனர். [8][13]
கிமு 513ல் பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ் கருங்கடலைக் கடந்து கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி சிதியர்களை ஒடுக்கினார்.[14] மேலும் சிதியர்களின் கோட்டைகளையும், வாழ்வாதரங்களையும் அழித்தார்.
சிதியர்களின் பெரும்பகுதியை தேசப்படுத்திய களைப்படைந்த டேரியசின் படைகள் நோய்களால் துன்பமுற்றது. படைகளின் உயிர் சேதத்தை தவிர்க்க டேரியசின் படைகள், வால்கா ஆற்றின் கரையிலிருந்து, பண்டைய கிரேக்கத்தின் திராசு நகரை நோக்கி திரும்பிச் சென்றது. [15]
ஏஜியன் கடலுக்கு வடக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளை தனக்கு கப்பம் கட்டும் நாடுகளாக பணிந்தது.
[16] பேரரசர் டேரியஸ் பின்னர் சார்டிஸ் நகரத்தில் குளிர்காலத்தை கழித்தார்.
கிமு 510ல் கிரேக்கத் தீவுகள் மற்றும் அனத்தோலியா பகுதிகளை ஆண்ட கிரேக்க குறுநில மன்னர்கள் டேரியசின் மேலாண்மையை ஏற்றனர். கிரேக்க - பாரசீக உறவுகளை மேம்படுத்த, தன் பேரரசில் பணி புரிய விரும்பும் கிரேக்க படைவீரர்கள், மாலுமிகள், அரசியல் விற்பன்னர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பேரரசர் டேரியஸ் தன் கருவூலங்களையும், அரசவையையும் திறந்து விட்டார். பாரசீகப் பேரரசின் அனதோலியா மற்றும் லிடியா பகுதிகளில் கணக்கற்ற கிரேக்க குடியேறிகளால் நிரம்பி வழிந்தது.
கிமு 490ல் கிரேக்கர்களின் ஐயோனியக் கிளர்ச்சியை அடக்க, கிரேக்கர்களின் ஏதன்ஸ் மற்றும் எரித்திரியா நகரங்கள் மீது வந்த பாரசீக தரைப்படையும், கப்பற்படையும், மாரத்தான் போரில் ஈடுபட்டது. போரின் முடிவில் கிரேக்கப்படைகள், பாரசீகப் படைகளை தந்திரமாக வெற்றி கொண்டனர்.
முதலாம் டேரியஸ், கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் நன்கறியப்படுகிறார். தன் பேரரசுக்குட்பட்ட ஐயோனியாவில் நடந்த கிளர்ச்சியை தூண்டிய கிரேக்கர்களை அடக்கி ஆண்டவர்.
Cook, J. M. (1985), "The Rise of the Achaemenids and Establishment of their Empire", The Median and Achaemenian Periods, Cambridge History of Iran, vol. 2, London: Cambridge University Press
Wilber, Donald N. (1989). Persepolis : the archaeology of Parsa, seat of the Persian kings (Rev. ed.). Princeton, N.J.: Darwin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-87850-062-6.