முதலாம் செர்கஸ் (பிறப்பு:கிமு 519 – இறப்பு: கிமு 465) (Xerxes I) மகா செர்கஸ் என்றும் அழைக்கப்படும் இவர் முதலாம் டேரியசின் மகன் ஆவார். அகாமனிசிய பேரரசின் ஐந்தாம் பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசை கிமு 486 முதல் கிமு 465 வரை ஆண்டார். இவரது தலைநகரம் பெர்சப்பொலிஸ் ஆகும். யூதர்களின் பழைய எற்பாட்டின் எஸ்தர் நூலில் இப்பேரரசரை அகாசுரர்ஸ் எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் இவரது யூத மனைவி எஸ்தர் ஆவார். ஒரு பாரசீகப் படைத்தலைவரிடமிருந்து, யூத மக்களை காப்பாற்றிய பெருமை எஸ்தரை சாரும்.[2][3][4]
↑The Achaemenid Empire in South Asia and Recent Excavations in Akra in Northwest Pakistan Peter Magee, Cameron Petrie, Robert Knox, Farid Khan, Ken Thomas p.713